தாய்ப்பா சுரப்பை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்..?

post-img

பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

 கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை தேடித் தேடி சாப்பிட்டு வந்திருப்பீர்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு உங்கள் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பிவிடும். ஆனால் இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு.

கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை தேடித் தேடி சாப்பிட்டு வந்திருப்பீர்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு உங்கள் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பிவிடும். ஆனால் இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு.

 பிரசவத்திற்கு பிறகும் உங்களை நீங்கள் கட்டாயமாக கவனித்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தையின் நலனுக்கும் அவசியமாக கருதப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்கு பிறகு குறைந்த ஆற்றல் நிலை, மெதுவான வளர்சிதை மாற்றம், திடீர் ஹார்மோன் அதிகரிப்பு மற்றும் பல உடல் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

பிரசவத்திற்கு பிறகும் உங்களை நீங்கள் கட்டாயமாக கவனித்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தையின் நலனுக்கும் அவசியமாக கருதப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்கு பிறகு குறைந்த ஆற்றல் நிலை, மெதுவான வளர்சிதை மாற்றம், திடீர் ஹார்மோன் அதிகரிப்பு மற்றும் பல உடல் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பதற்காக நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கலோரிகளை விட அதிகமாக சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் இந்த கூடுதல் கலோரிகளே தாய்ப்பாலாக மாற்றப்படும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 முதல் 600 கலோரிகள் வரை நீங்கள் கூடுதலாக சாப்பிட வேண்டும். உங்கள் குழந்தைக்கு கொடுப்பதற்கு போதுமான தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால் பின்வரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நீங்கள் உங்களின் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

 ,[object Object], நட்ஸ் மற்றும் சீட்ஸ்களில் மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம் மற்றும் லிப்பிடுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒவ்வொரு தாய்ப்பாலூட்டும் பெண்ணின் டயட்டிலும் இவை கட்டாயமாக இருக்க வேண்டும். ஹெம்ப் மற்றும் ஆளி விதைகளில் காணப்படும் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் நல்லது.

நட்ஸ் மற்றும் சீட்ஸ்: நட்ஸ் மற்றும் சீட்ஸ்களில் மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம் மற்றும் லிப்பிடுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒவ்வொரு தாய்ப்பாலூட்டும் பெண்ணின் டயட்டிலும் இவை கட்டாயமாக இருக்க வேண்டும். ஹெம்ப் மற்றும் ஆளி விதைகளில் காணப்படும் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் நல்லது.

 ,[object Object], கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சை நிற காய்கறிகளை தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது ஏதாவது ஒரு வடிவில் சாப்பிட வேண்டும். காய்கறிகள் சாப்பிடுவதால் அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் காரணமாக குழந்தைக்கு வாயு பிரச்சனை வந்து விடுமோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், கட்டாயமாக இந்த கார்போஹைட்ரேட் தாய்ப்பாலை பாதிக்காது.

பச்சைநிற காய்கறிகள்: கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சை நிற காய்கறிகளை தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது ஏதாவது ஒரு வடிவில் சாப்பிட வேண்டும். காய்கறிகள் சாப்பிடுவதால் அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் காரணமாக குழந்தைக்கு வாயு பிரச்சனை வந்து விடுமோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், கட்டாயமாக இந்த கார்போஹைட்ரேட் தாய்ப்பாலை பாதிக்காது.

 ,[object Object], கொண்டைக்கடலையில் ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் காணப்படுகிறது. இது தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளது. ஆகவே தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க அன்றாட உணவில் கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை சேர்ப்பது பலனளிக்கும்.

பயறு வகைகள்: கொண்டைக்கடலையில் ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் காணப்படுகிறது. இது தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளது. ஆகவே தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க அன்றாட உணவில் கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை சேர்ப்பது பலனளிக்கும்.

 ,[object Object], ஓட்ஸ், கினோவா மற்றும் பார்லி போன்ற முழு தானியங்கள் தாய்ப்பால் உற்பத்திக்கு காரணமான ஹார்மோன்கள் நன்றாக சுரக்க உதவி புரிகின்றன. அதோடு தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான கூடுதல் 600 கலோரிகளை எளிதாக அடைய முழு தானிய உணவுகள் உதவி செய்கிறது.

முழு தானியங்கள்: ஓட்ஸ், கினோவா மற்றும் பார்லி போன்ற முழு தானியங்கள் தாய்ப்பால் உற்பத்திக்கு காரணமான ஹார்மோன்கள் நன்றாக சுரக்க உதவி புரிகின்றன. அதோடு தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான கூடுதல் 600 கலோரிகளை எளிதாக அடைய முழு தானிய உணவுகள் உதவி செய்கிறது.

 ,[object Object], அவகாடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான வைட்டமின்கள் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, அவர்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. அதோடு இதில் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கொழுப்பு சத்து அடங்கியுள்ளது. வெண்ணெய் பழத்தில் காணப்படும் லிப்பிடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியம்.

அவகாடோ: அவகாடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான வைட்டமின்கள் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, அவர்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. அதோடு இதில் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கொழுப்பு சத்து அடங்கியுள்ளது. வெண்ணெய் பழத்தில் காணப்படும் லிப்பிடுகள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியம்.

 ,[object Object], தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் வைட்டமின் டி சத்து அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் தாய்ப்பால் ஊட்டும் காரணத்தால் ஒரு தாய் தனது உடலில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் வைட்டமின்களை இழக்கிறாள். பால், தயிர் சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயமாக தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது தாய் மற்றும் குழந்தைக்கும் நல்லது.

பால் சார்ந்த உணவுகள்: தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் வைட்டமின் டி சத்து அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் தாய்ப்பால் ஊட்டும் காரணத்தால் ஒரு தாய் தனது உடலில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் வைட்டமின்களை இழக்கிறாள். பால், தயிர் சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை கட்டாயமாக தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது தாய் மற்றும் குழந்தைக்கும் நல்லது.

 இது தவிர அதிகப்படியாக காரம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது குழந்தைக்கு வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் மது அருந்துவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். காபி, டீ மற்றும் சாக்லேட் போன்றவற்றில் காஃபின் காணப்படுவதால் குறிப்பிட்ட காலத்திற்கு இவற்றையும் தவிர்ப்பது குழந்தையின் நலனுக்கு நல்லது.

இது தவிர அதிகப்படியாக காரம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது குழந்தைக்கு வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் மது அருந்துவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். காபி, டீ மற்றும் சாக்லேட் போன்றவற்றில் காஃபின் காணப்படுவதால் குறிப்பிட்ட காலத்திற்கு இவற்றையும் தவிர்ப்பது குழந்தையின் நலனுக்கு நல்லது.

 

Related Post