அதென்ன பச்சை கலர் அல்வா.."வாழ வைக்கும் வாழை" - "வாழையிலை"

post-img

வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்துக்கள் உள்ளன.. இவைகள் கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. வைட்டமின் ஏ.சி, மற்றும் கே விட்டமின்கள் குடற்புண்களை ஆற்றும்.. இந்த இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்துள்ளன.

பச்சையம்: நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது. தலைமுடி கருப்பாக இருக்கும். வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை.

பாடையிலும் வாழை: அதனால்தான், பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள், கல்யாணங்கள், போன்ற இடங்களில் வாழைமரங்கள் முதலுதவிக்காக கட்டி வைப்பார்கள்.. உயிருக்கு ஆபத்தான நேரத்தில், மங்களகரம் என்று சொல்லி கட்டி வைக்கும் இந்த வாழைதான் உயிரை காப்பாற்றக்கூடியது. அவ்வளவு ஏன், இடுகாட்டுப் பாடையிலும்கூட வாழை மரம் கட்டி வைப்பார்கள்.

கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால், அந்த இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும்.. இதைவைத்தே உணவின் விஷத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.. அதனால்தான், விருந்துக்கு எதிரியே அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், வாழையிலையை வைத்து சமையல் செய்வார்கள்.. மீன் பொழிச்சது இந்த வாழையிலையில் செய்யப்படும் கேரளாவில் மிகப்பிரபலமான உணவாகும். ஆனால், வாழையிலையில் அல்வாவும் செய்வார்கள்.. 2 வாழை இலைகளை சுத்தப்படுத்தி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனை மிக்சியில் போட்டு சிறிதளவு எலுமிச்சம்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துகொள்ள வேண்டும்.

வாழையிலை விழுது: பிறகு, ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அதில் முந்திரி, பூசணி விதைகளை தனித்தனியாக சேர்த்து நன்றாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும்... அதே வாணலியில் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வாழை இலை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்க வேண்டும். பிறகு, சோள மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ள வேண்டும்.

வாழை இலை விழுது நன்றாக வதங்கி கெட்டியானதும், அதில் சோள மாவு கரைசலை போட்டு கிளறவேண்டும். அடுத்ததாக, ஏலக்காய் பொடி, சர்க்கரை, கலந்து, கொஞ்சம் கொசமாக நெய் ஊற்றிக் கிளறிவிட்டு, இறுதியில், வறுத்த முந்திரி, பூசணி விதைகளை தூவினால், வாழையிலை அல்வா ரெடி.. அதேபோல, வாழையிலையை வைத்து குளியல் செய்வார்கள்.. அதன்பெயரே "வாழையிலை குளியல்"தான்.

வாழையிலை குளியல்: காலை முதல் முற்பகல் 11 மணிக்குள் குளிப்பது நல்லது என்கிறார்கள்.. மறுநாள் காலை வாழை குளியல் செய்ய வேண்டுமானால், முதல் நாளே, நிறைய நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டுமாம்.. நம் உடம்பில் உள்ள வியர்வைகள் இந்த குளியலில் வெளியேற போவதால், வாழை குளியல் எடுப்பவர் 6 டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, இந்த குளியலை மேற்கொள்ளலாம் என்கிறார்கள்.

4, 5 வாழை இலைகளை எடுத்து, தலை முதல் கால் வரை உடம்பு முழுவதும் சுற்றி நார் அல்லது கயிறுகளால் மூடிவிட வேண்டும்.. மூச்சு விடுவதற்கு மட்டும், இலையின் சிறுபகுதியை சிறு பகுதியை வெட்டிவிட்டால் போதும். உடம்பில் எந்த பாகமும் தெரியாதவாறு, அப்படியே இலைகளால் மூடி 20 முதல் 30 நிமிடங்கள் வரை படுத்திருந்தால் போதும். இதற்கே, அரை லிட்டர் முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்குமாம்.

காற்றோட்டமான நிழலுள்ள இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.. உடல் பருமனுக்கும் சிறந்த சிகிச்சையாக இது உள்ளது.. ஆனால், உடம்பில் சுற்றி பயன்படுத்தப்பட்ட இலையில் நச்சுக்கள் இருக்கும் என்பதால், ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போடக்கூடாது.

ஆலோசனை: அதேபோல, 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாழையிலை குளியல் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.இப்படி இந்த வாழையிலை குளியலுக்கான சில வழிமுறைகள் இருக்கின்றன.. எனவே, தகுந்த ஆலோசனைகள் இல்லாமல் இந்த குளியலை எடுத்து கொள்ளக்கூடாது. எனினும், இந்த வாழையிலை குளியலினால், உடம்பிலுள்ள தேவையற்ற எடையை குறைக்கும்.

உடல் வீக்கத்தை போக்கி, கை, கால்வீக்கத்தைப்போக்கும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.. சிறுநீரக செயலிழப்பை தடுக்கும். புத்துணச்சியை தரும் என்பதால், மூலிகை மருத்துவத்தில், வாழையிலை மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.

Related Post