கோடைக்காலத்தில் முலாம் பழம் அவசியம் சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?

post-img

கோடைக்காலம் வந்திடுச்சு, வெயில் வாட்டி வதைக்கிறது.. சிறிது தூரம் வெளியில் சென்று வந்தாலே நீர்ச்சத்து இன்றி உடல் சோர்வாக காணப்படும். இந்த நேரத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் : முலாம்பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் தொடர்ச்சியாக இந்த கோடைக்காலத்தில் முலாம்பழங்களை சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
                             
சிறுநீரக பிரச்சனைக்குத் தீர்வு : முலாம்பழத்தில் ஏராளாமான சைலோகைன்கள் உள்ளது. இவை சிறுநீரக கற்களைத் தடுக்கவும், நம்முடைய உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவியாக உள்ளது.
மலச்சிக்கலுக்குத் தீர்வு : முலாம்பழத்தில் ஏராளமான நீர்ச்சத்துக்கள் உள்ளது போன்று அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளது. இவற்றை நீங்கள் சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக இயக்குவதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.
                              ,[object Object], முலாம்பழத்தில் ஏராளமான நீர்ச்சத்துக்கள் உள்ளது போன்று அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளது. இவற்றை நீங்கள் சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக இயக்குவதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.
இது மட்டுமின்றி, முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ தலை முடி ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றது. மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், உடல் எடைக்குறைப்பு, ஆரோக்கியமான தோல் வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவியாக உள்ளது. எனவே இந்த கோடைக்கால சீசனில் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முலாம்பழத்தை மறக்காமல் டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.

Related Post