சைவ உணவுகளிலும் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு, தினசரி உணவில் அவற்றை சேர்த்து சாப்பிட்டு வர புரோட்டீன் குறைபாட்டை எளிதாக தவிர்க்கலாம்.
நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும், தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும் புரோட்டீன் மிகவும் அவசியம். பெரும்பாலான அசைவ உணவுகள் புரோட்டீனின் ஆதாரங்களாக இருக்கின்றன. இவ்வாறு இருக்க சைவ உணவு உண்பவர்கள் புரோட்டீன் சத்து பெறுவதற்கு என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்த சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
புரோட்டீன் என்பது நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து. குறிப்பாக ஜிம்மில் பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு துறையில் இருப்பவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஆனால் சைவ உணவு உண்பவர்களுக்கு புரோட்டீன் சத்தினை எவ்வாறு பெறுவது என்பது குறித்த ஐயப்பாடு அடிக்கடிதோன்றுவது உண்டு. சைவ உணவுகளிலும் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு, தினசரி உணவில் அவற்றை சேர்த்து சாப்பிட்டு வர புரோட்டீன் குறைபாட்டை எளிதாக தவிர்க்கலாம். ஆகவே புரோட்டீன் நிறைந்த ஐந்து சைவ உணவுகள் சிலவற்றை இப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பூசணி விதைகள்: பூசணி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் அதிக அளவில் புரோட்டீன் காணப்படுகிறது. பூசணி விதைகளை சாப்பிடுவது நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பை வழங்கி நமது உடலை ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது. பூசணி விதைகளின் பலன்களைப் பெற அதனை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
ட்ரை ஃப்ரூட்ஸ்: ஜிம்முக்கு செல்லும் வெஜிடேரியனாக நீங்கள் இருந்தால் உங்கள் டயட்டில் கட்டாயமாக ட்ரை ஃப்ரூட்ஸ் இணைத்துக் கொள்ளுங்கள். முந்திரி பருப்பு, பாதாம் மற்றும் உலர் திராட்சை போன்றவற்றில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. ஆனால் இவற்றை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.
டோஃபு: வெஜிடேரியன்கள் புரோட்டீனை சோயா பீன்ஸிலிருந்து தாராளமாக பெறலாம். சோயா பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட டோஃபு கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. 100 கிராம் டோஃபுவில் 8 கிராம் புரோட்டீன் காணப்படுகிறது. ஜிம்மில் பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் சத்து பெறுவதற்கு தங்களது டயட்டில் டோஃபுவை சேர்த்துக் கொள்ளலாம்.