நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவை ஜப்பானிய சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.இவை தான் உங்கள் தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஆளுமையை எதிரொலிக்கின்றன என்பதால் வாழ்க்கையில் சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு முயற்சி செய்கின்றனர்.
ஆரோக்கியம், மன நிம்மதி, தன்னம்பிக்கை போன்றவை இருந்தாலும் போதும் எந்த சூழலிலும் நம்முடைய வாழ்க்கை பயணத்தை எளிதாக எடுத்து செல்லமுடியும் என்பது தான் எதார்த்தம். இவை அனைத்தையும் தன்னுடைய கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களில் கொண்டுள்ள நாடு தான் ஜப்பான்.
இங்குள்ள கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறை பிற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கெல்லாம் முன் உதாரணமாக உள்ளது. இந்த நடைமுறை அவர்களின் வாழ்க்கையில் மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இதோ ஜப்பானிய மக்கள் தங்களின் வாழ்க்கையில் பின்பற்றும் சில செயல்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்..
இக்கிகய் (Ikigai) : ஜப்பானிய மொழியில் இக்கிகய் என்பது, வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு நோக்கத்தை வரையறுத்து செயல்படுத்தக்கூடிய நடைமுறை என்றாக உள்ளது. அதாவது நீங்கள் அதிகாலையில் ஏன் சீக்கிரம் எழ வேண்டும்? என்பதற்கானக் காரணம் முதல் உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு பணம் தேவை? இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துக் கொண்டு செயல்படுத்துவதை தான் Ikigai என்கிறார்கள்.
ஓபைடோரி (Oubaitori) : இது வாழ்க்கையில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.ஆம் ஜப்பானிய மொழியில் ஓபைடோரி என்பது தன்னை மற்றவர்களுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது என்பதாகும். ஒருவேளை ஒப்பிடும் போது தன்னம்பிக்கை குறைவதற்கு இது காரணமாக அமையும் என்று நம்புகின்றனர்.
ஷின்ரின்-யோகு (Shinrin-Yoku): வனங்களில் அதிக நேரம் செலவிடுவதை ஜப்பானியர்கள் விரும்புகின்றனர். ஜப்பானிய மொழியில் ஷின்ரின் என்றால் காடு என்றும் யோகு என்றால் குளியல் என்றும் பொருள். இந்த நடைமுறை அடர் வனம் போன்ற இயற்கை சூழலில் மக்களை நேரத்தை செலவிட ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது மற்றும் மனநிலை மேம்படுகிறது என்று நம்புகின்றனர். இதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுகிறது. எனவே தான் ஜப்பானிய மக்கள் பசுமை உள்ள இடங்களான காடுகள், பூங்காக்கள் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுகின்றன.
ஹரா ஹச்சி பு ( Hara Hachi Bu): ஜப்பானியர்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்கள் சாப்பிடும் உணவு முறை ஒரு முக்கிய காரணம்.அவர்கள் எப்போது சாப்பிட்டாலும் 80 சதவீதம் வயிறு நிரம்பும் வரைத் தான் சாப்பிடுகிறார்கள். இதனால் உடல்பருமன் மற்றும் நீரழிவு போன்ற எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. இதனால் தான் வயதானாலும் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள்.
உறவுகளை வளர்ப்பது: ஜப்பானியர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றிவரக்கூடிய முக்கிய விஷயங்களில் ஒன்று உறவுகளைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசும் போது மன அழுத்தம் குறைகிறது
உணவுமுறை : உடலில் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்க கிரீன் டீ முதல் இயற்கையாக விளையும் அரிசி, பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் தான் ஜப்பானிய மக்களின் உணவு முறையில் இடம் பெற்றிருக்கும்.
சுய முன்னேற்றம்: நல்லிணக்கம், ஒழுக்கம் மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவை ஜப்பானிய சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.இவை தான் உங்கள் தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஆளுமையை எதிரொலிக்கின்றன என்பதால் வாழ்க்கையில் சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு முயற்சி செய்கின்றனர்.
இதுப்போன்று வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்களை மேற்கொண்டு வருவதால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் உள்ளனர்.