மாத்திரைகள் சாப்பிடாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வயிற்றில் உள்ள வீக்கம் மற்றும் அசிடிட்டி பிரச்னையை குறைக்கலாம். அதற்கான உணவுகளை இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.
இன்று அதிகப்படியான மக்கள் சந்திக்கும் பிரச்சனை அசிடிட்டி. எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், வயிற்றில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும். செரிமான அமைப்பு சரியாக இல்லாவிட்டால், வயிறு எரியும் என்று நினைத்து விட்டுவிடுவோம். அசிடிட்டி அதிகமான பிறகு அதை சரி செய்ய போராடுவோம்.
அசிடிட்டி இருக்கும்போது காரமான உணவுகளை சாப்பிட்டால், அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் செரிமான சிக்கல் ஏற்பட்டால், உணவை தாமதமாக சாப்பிட்டால், அல்சர் இருந்தால், சூடுபிடித்தால், சோடா, கூல் டிரிங்க்ஸ் அதிகம் குடித்தால் என்று அசிடிட்டியை உணர்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது மருத்துவரை அணுகி மருந்துகளைப் பயன்படுத்துவோம். ஆனால் மாத்திரைகள் சாப்பிடாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வயிற்றில் உள்ள வீக்கம் மற்றும் அசிடிட்டி பிரச்னையை குறைக்கலாம். அதற்கான உணவுகளை இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.
வயிற்றில் அதிகம் அமிலம் சுரக்கும்போது தான் இந்த அசிடிட்டி பெரும்பாலும் ஏற்படுகிறதே அதை சமன் செய்யும் உணவுகளை தான் எடுக்க வேண்டும். அதில் முதன்மையான ஒன்று வெள்ளரி. வெள்ளரியை வெறுமனே கடித்து சாப்பிடுவது நல்லது. அல்லது ஜூஸ் வடிவத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.
வயிற்றில் ஏற்படும் வீக்கத்தை எளிதில் குறைக்க அவகேடோ பெரிய உதவியாக இருக்கும் . எனவே, நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, அவகேடோ ஜூஸ் குடிப்பது அல்லது அவகேடோ பலத்தை வெட்டி அப்படியே சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
தயிர் மற்றும் தேன் இரண்டுமே வயிற்று வீக்கத்தையும் குறைக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஒரு கப் தயிரில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று எரிச்சல் மற்றும் வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெறும் வெந்நீரில் தேன் குடித்தாலும் நல்லது.
அதே போல வாழைப்பழத்தை உட்கொள்ளும்போது அது வயிற்று அமிலங்களை நடுநிலையாக்கி அசிடிட்டி வருவதைத் தடுக்கும். அதே போல ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சிறிது மஞ்சள் தூளை கரைத்து அதில் கொஞ்சம் கறுப்பு உப்பு சேர்த்து உட்கொண்டால் வயிற்று உப்பசம் குறையும்.
இரண்டு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் குடிக்கவும். இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால் வயிற்று வீக்கம் குறையும். அதே போல தினமும் மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன் கொஞ்சம் சோம்பு வாயில் மென்று சாப்பிட வேண்டும், இது குறிப்பாக வயிற்றில் ஏற்படும் அழற்சியிலிருந்து விடுபட உதவும்.
இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் குடிக்கவும். இதுவும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து அசிடிட்டி வராமல் தடுக்கும்.
அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துளசி ஒரு தெய்வீக மருந்து. துளசி இலையைத் தொடர்ந்து தின்பலத்து அல்லது தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பது அசிடிட்டியில் இருந்து நிவாரணத்தை அளிக்கும்
இதனுடன் பழச்சாறு, வினிகர், தேன் ஆகியவற்றை உணவுக்கு முன் உட்கொண்டு, உணவுக்குப் பிறகு போதுமான அளவு தண்ணீர் சாப்பிட்டு வந்தால், அமிலத்தன்மை நீங்கும் என்கின்றனர் மருத்துவர்கள்