ஆரோக்கியம் நிறைந்த ரோஸ்டடு மசாலா பனீர் ரெசிபி செய்முறை..!

post-img

நாம் பெரும்பாலும் பனீரை வைத்து பனீர் கிரேவி, பாலக் பனீர், பனீர் டிக்கா, பனீர் கறி செய்திருப்போம். பனீரை வைத்து ஏதாவது புது ரெசிபி செய்ய நினைத்தால், இதை ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான பன்னீர் ரோஸ்டடு மசாலா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீர் - 400 கிராம்

உப்பு - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

சீரக தூள் - 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.

கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.

நெய் - 2 ஸ்பூன்.

கொத்தமல்லி - புதினா சட்னி

கொத்தமல்லி இலை - 1 கப்.

புதினா இலை - 1 கப்.

வெங்காயம் - 1 துண்டு நறுக்கியது.

பூண்டு - 2 பற்கள் நறுக்கியது.

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது.

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது.

எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தின் சாறு.

உப்பு - 1/4 ஸ்பூன்.

செய்முறை :

முதலில், ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய பன்னீர், உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.

இதையடுத்து, மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, புதினா, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், எலுமிச்சைபழச்சாறு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும். நெய் உருகியதும், அதில் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் அனைத்து பக்கங்களையும் வறுத்து எடுக்க ரோஸ்டடு மசாலா பனீர் தயார்!

 

Related Post