ஸ்கூல் திறக்க போறாங்க.. கிட்ஸ் லஞ்ச் பாக்ஸுக்கு சிறுகீரை சாதம் செய்வது எப்படி?

post-img

பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஒரே கவலை தங்களது குழந்தை ஸ்நாக்ஸையும் மதிய உணவையும் மிச்சம் வைத்துவிடுகிறார்கள் என்பதுதான! என்னதான் ருசியாக செய்து கொடுத்தாலும் பாக்கெட் ஐட்டங்களின் மீதுள்ள நாட்டம் அவர்களுக்கு வீட்டு முறை உணவுகளில் வருவதில்லை.

இதற்குத்தான் எந்த உணவை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு புரதச் சத்து அவசியமாகும். எந்த கீரையாக இருந்தாலும் அதை நாம் வீட்டில் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.

ஆனால் அவற்றை பள்ளிகளுக்கு கொடுத்தனுப்பினால், டீச்சருக்கு பயந்துதாவது சாப்பிட்டு வர வாய்ப்புள்ளது. சாம்பார், ரசம் என கொடுத்து அனுப்புவதை காட்டிலும் கீரைகள், காய்கறிகளை கொடுத்தனுப்பலாம். அந்த வகையில் சிறுகீரை சாதம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;

சிறுகீரை கட்டு 1

வெங்காயம்- 2

காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப

பூண்டு 10 பற்கள்- இரண்டாக அல்லது 3ஆக வெட்டி கொள்ள வேண்டும்

கடுகு, பெருங்காயத்தூள்- தாளிக்க

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய்,

உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை: கீரையை ஆய்ந்து வைத்துக் கொண்டு ரஃப்பாக கட் செய்து கொள்ள வேண்டும். எப்போதும் கீரையை அலசி விட்டுதான் கட் செய்ய வேண்டும். மண் நீங்கி நீர் தெளிவாகும் வரை அலசி வடித்துவிட்டு கட் செய்ய வேண்டும். கட் செய்துவிட்டு எப்போதும் கீரையை அலச வேண்டாம். ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டதும் பெருங்காயத்தை போட்டு காய்ந்த மிளகாயை கிள்ளி போட வேண்டும். அது கருகாமல் வறுத்தெடுத்து உடனே வெங்காயத்தை போட்டு பிங்க் நிறத்தில் வரும் வரை வதக்கவும். பிறகு பூண்டு போட வேண்டும். அது வதங்கியதும் அலசி பொடியாக நறுக்கி வைத்த கீரையை போட வேண்டும்.

Do you know how to do keerai rice for kids lunch box?

பின்னர் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து கீரையை கை விடாமல் வதக்க வேண்டும். கீரையில் மஞ்சள் தூளை போட்டு வதக்கவும், கீரை வதங்கி சுருண்டதும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் தண்ணீர் தெளித்து தெளித்து கீரையை வேக வைக்க வேண்டும். கீரை வெந்ததும் அடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.

பின்னர் சாதத்தை குக்கரிலோ அல்லது வடித்தோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் விட்டு ஆற வைக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு கீரையை போட்டு ஸ்பூன் மூலம் நன்கு பிசைய வேண்டும். பின்னர் அதை லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்துவிடலாம்.

கீரையில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் பூண்டு வாயு தொல்லையை போக்கும். வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இந்த கீரை சாதத்தை கொடுப்பதால் பொரியல் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. 20 நிமிடங்களில் இந்த ரெசிபியை செய்து முடித்துவிடலாம். நிச்சயம் இதை குழந்தைகள் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள்.

Related Post