சூப்பர் கண்டுபிடிப்பு.. நரை முடியை மீண்டும் கருப்பாக்கலாம்..

post-img

ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முடி குறித்த கவலை நிச்சயமாக இருக்கும். முடி கொட்டுதல் இளநரை இவை எல்லாம் சொல்வதற்கு சாதாரணமான பிரச்சனைகளாக தோன்றினாலும், மனிதர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதில் இவை முன்னனியில் இருக்கும்.

இப்போது விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி இந்த பிரச்சனைகளை தீர்க்கும் விடிவு காலம் விரைவில் வரலாம் என்ற நம்பிக்கையை உருaவாக்கும். ஆம், எதனால் முடி நரைக்கிறது என்கிற காரணத்தை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். வயதானால் நரைக்கும் என்பது பொதுவாக சொல்லக்கூடிய காரணம் என்றாலும். எவ்வாறு அந்த மாற்றம் நிகழ்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

                                                             

அதாவது நம் உடம்பில் உள்ள ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு உருமாற்றம் அடையும் திறன் கொண்டவை. இவை நுண்ணறைகளுக்கு நடுவே அடிக்கடி நகர்ந்து ஊடுருவும் காரணத்தினால் தான் முடிக்கு கருப்பு நிறத்தினை கொடுத்து அவற்றை வளமாக வைத்து கொள்ள உதவுகின்றன. நமக்கு வயதாக ஆக இவை நகரும் திறனை இழக்கிறது. அதனால் தான் நமக்கு நரை முடி ஏற்படுகிறது. இளவயதில் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஸ்டெம் செல்கள் நகரும் திறனை இழக்கலாம் அதனால் இளநரை ஏற்படுகிறது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

                                                                 நரைமுடியை கறுப்பாக்க  இனி டை வேண்டாம்… இதை செய்யுங்க போதும்!

எலி ஒன்றில் நடத்திய சோதனையில் இவை தெரிய வந்திருக்கின்றன. அவற்றில் இருக்கும் melanocyte ஸ்டெல் செல்களை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். இந்த melanocyte ஸ்டெம் செல்கள் மனிதர்களிடத்திலும் இருக்கும், அதனால் அவர்களுக்கும் இவ்வாறு தான் நரை முடி உண்டாகிறது என்று குறிப்பிடுகிறார்கள். இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. காரணம் இதை பயன்படுத்தி நரைத்த முடியை மீண்டும் கருமையாக்கவும், முடி நரைக்காமல் தடுக்கவும் வழிகளை கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

 

Related Post