கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் வருவது ஏன்..? மருத்துவர் தரும் விளக்கம்..!

post-img

 

முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, 70% கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்களில் வீக்கம் ஏற்படலாம். அது ஒவ்வொருவருடைய உடல்வாகை பொறுத்து ஒரு சிலருக்கு லேசாகவும் ஒரு சிலருக்கு மிகவும் கவனிக்கத்தக்க, கவலைப்படத்தக்க அளவிலும் இருக்கலாம்.

5 ways to manage swollen legs and feet during pregnancy | Your Pregnancy  Matters | UT Southwestern Medical Center

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கான காரணங்கள்:

    • காலில் இருந்து இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தம் புவியீர்ப்பு விசையை எதிர்த்து செல்லும் பொழுது இயல்பாக இருப்பதை விட கர்ப்ப காலத்தில் சிறிது மெதுவாக இருக்கும்.
    • கர்ப்ப காலத்தில் இரத்தம் செல்லக்கூடிய சிரைகள் லேசாக விரிவடைந்து இருக்கும்.
    • ரத்தத்தினுடைய அளவும் அதிகமாக இருப்பதோடு ரத்தத்தில் உள்ள நீரின் அளவு அதிகமாகவும், செல்கள் ஒப்பிட்டு அளவில் குறைவாகவும் இருக்கும்.
  •     வளரும் கர்ப்பப்பையின் அழுத்தம் காரணமாக கீழிருந்து இருதயத்திற்கு மேலே செல்லக்கூடிய ரத்தத்தின் ரத்தம் லேசாக தடைபடும்.

இதை சமாளிக்கும் முறைகள்:

    • நிற்கும் நேரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை கால்களை கீழே தொங்கவிடாமல் உயரத்தில் வைத்துக் கொள்ளலாம். இரவில் படுக்கும் பொழுதும் கால்களுக்கு கீழே தலையணைகளை வைத்து அதன் மீது கால்களை வைத்து உறங்குவது நல்லது.
    • மெதுவான நடை பயிற்சி, அத்தோடு பாதங்களுக்கான லேசான பயிற்சியும் நல்ல பலனை தரும்.
    • நீர் ஆகாரங்களை அதிகமாக அருந்துதல் , உப்பு அளவு குறைவாக சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
    • கால்களில் அணியும் காலணிகள் மிகவும் இறுக்கமாக இல்லாமல் லேசாக தளர்வாக பிடிக்கும்படி இருப்பது நல்லது.

70 சதவீத கால் வீக்கம் கவலை தரக்கூடியது இல்லை என்றாலும் 30 சதவீதமான பெண்களுக்கு லேசான ரத்த அழுத்த அதிகரிப்பும் அத்துடன் சிறுநீரில் புரதம் வெளியேறுவது போன்ற பிரச்சனையும் இருக்கலாம். அதனால் கால் வீக்கம் இருந்தால் அதற்குரிய சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வெகு அரிதாக ஒரு சிலருக்கு கல்லீரல் அல்லது இருதய

நோய்கள் இருப்பினும் காலில் அதிகமான வீக்கம் ஏற்படலாம். இருப்பினும் கர்ப்பகாலம் முடியும் வரை, சிலருக்கு பிரசவம் ஆன பிறகு, ஆறு வாரங்கள் வரை, லேசான கால் வீக்கம் தொடரலாம் . வேறு ஏதும் பிரச்சனை இல்லாதவர்கள் அதைக் கண்டு பயப்பட தேவையில்லை.

 

Related Post