இந்த 5 கொடிய நோய்களை வாசனையைக் கொண்டே கண்டறியலாம்..உஷாரா இருங்க

post-img

நமது உடலில் வீசும் வாசனை ஒருவரைப் பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்தும். அதே சமயம் உடலில் இருந்து வீசும் குறிப்பிட்ட வகையான துர்நாற்றம் ஒருவரது உடலில் உள்ள ஆரோக்கிய பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவதாக உடல்நல நிபுணர்களின் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் நீண்ட காலமாக டைபாய்டு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதால், அவர்களுக்கு எந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஒரு வித்தியாசமான வாசனை வரும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.

Deadly Diseases That Can Be Detected Through Smell In Tamil

இதனால் ஒருவர் மீது வீசும் வாசனையைக் கொண்டே மருத்துவர்களால் எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனை இருக்கும் என்பதை எளிதில் கூற முடியும். ஏனெனில் ஒரு நோயால் பாதிக்கப்பட்டால், அது உடலில் உள்ள உயிர்வேதியியல் செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, உடலில் எளிதில் ஆவியாகும் மூலக்கூறுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

இந்த மூலக்கூறுகள் இரத்தத்தின் வழியே நுரையீரவை அடைந்து, சிறுநீர், மூச்சுக்காற்று மற்றும் வியர்வையின் வழியே வெளியேறி, துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இப்போது எந்த மாதிரியான நோய்கள் உடலில் இருந்தால், அவை உடலில் துர்நாற்றத்தை உண்டாக்கும் என்பதை காண்போம்.

இதைக் கேட்டதும், நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் நுரையீரல் புற்றுநோயை ஒருவரது மூச்சுக்காற்றைக் கொண்டே கண்டறிய முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவும் "NaNose" என்னும் மூச்சுத்திணறல் சாதனத்தைக் கொண்டு 90 சதவீதம் வரை துல்லியமாக கண்டறிய முடியும். இந்த சாதனமானது இஸ்ரேலை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

ப்ரீக்ளாம்ப்சியா

ப்ரீக்ளாம்ப்சியா என்பது ஒரு கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தமாகும். இது மிகவும் கொடிய எக்ளம்ப்சியாவின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாகும். இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 20 ஆவது வாரத்தில் தெரியும். இந்த பிரச்சனை இருந்தால் தீவிரமான வலிப்பு, நடுக்கம், குழப்பமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆய்வு ஒன்றின் படி, ஒருவரது கைரேகையைப் போன்றே தாயின் மூச்சுக்காற்றைக் கொண்டு 84 சதவீதம் துல்லியமாக ப்ரீக்ளாம்ப்சியாவை கண்டறிய முடிந்தது. மேலும் எக்ளம்ப்சியா அரிய நிலை மற்றும் இது ப்ரீக்ளாம்ப்சியா உள்ள பெண்களில் 3 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் செயலிழப்பு

கல்லீரல் செயலிழப்பு பிரச்சனை இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மூச்சுக்காற்று வலுவாக இருக்கும். எப்போது ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படவில்லையோ அல்லது கல்லீரல் நச்சுக்களை வடிகட்டும் வேலையில் பிரச்சனையைக் கொண்டிருந்தாலோ, அந்நபர் மோசமான வாய் துர்நாற்றத்தைக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, இரத்த நாளங்களில் சல்பர் கலந்து, நுரையீரல் வழியாக உடல் முழுவதும் பரவி, வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, உடல் துர்நாற்றமும் வீசும். முக்கியமாக கல்லீரல் பிரச்சனையைக் கொண்டிருந்தால், ஒருவரது மூச்சுக்காற்று அழுகிய முட்டை மற்றும் பூண்டின் வாசனையைக் கொண்டிருப்பதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறுநீரக பிரச்சனைகள்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, சிறுநீரக செயலிழப்பு உட்பட சிறுநீரக பிரச்சனைகளை மூச்சுக்காற்றின் மூலம் கண்டறியும் ஒரு டிஸ்போசபிள் சாதனத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சிறுநீரக நோயில் மோசமான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தில் வாசனை உணர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது உடலில் இருந்து ஒரு வித்தியாசமான துர்நாற்றம் வீசும். அதுவும் அந்த வாசனையானது அழுகிய பழங்களின் நாற்றத்தைக் கொண்டிருக்கும். ஏனெனில் இந்நிலையில் கீட்டோன்களின் அளவு அதிகரித்து, இரத்தத்தை அதிக அமிலமாக மாற்றி, உடலில் இருந்து ஒருவித சகித்துக் கொள்ள முடியாத பழத்தின் நாற்றத்தை வீச வைக்கும். ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால், பின் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Post