உடல் எடையை குறைப்பதில் எத்தனையோ வழிவகைகள் உள்ளன. அதேசமயம், எந்த டயட்டாக இருந்தாலும் சரி, அது ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஏற்றபடி தான் தேர்வு செய்ய வேண்டும்..
இது இன்டர்மிட்டண்ட் டயட்டுக்கும் பொருந்தும். அதில் ஒன்றுதான், இன்டர்மிட்டண்ட் டயட் என்பதாகும்.. இந்த டயட்டில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பின்பற்றும் உணவு இடைவெளி நேரமும், தேர்வு செய்வதும் தான்.
இன்டர்மிட்டண்ட் டயட் இருக்கும்போது, நாம் வழக்கமாக பின்பற்றும் உணவு இடைவெளி நேரம் (food window time) 16 - 8 என்கிற நேர இடைவெளி என்று வைத்துக் கொண்டால், அந்த 8 மணி நேரத்துக்குள் என்ன வகை உணவுகளை வேண்டுமானாலும் நம்முடைய விருப்பப்படி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. சமச்சீர் உணவு : அந்த கால இடைவெளி என்பது நம்முடைய உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்யவும் மெட்டபாலிசத்தை தூண்டவும், ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்கவும் உதவி செய்வதே தவிர, ஆரோக்கியமற்ற, ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பொருளல்ல.. உங்களுடைய 8 மணி நேர உணவு இடைவேளையின்போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நிச்சயம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சமச்சீர் உணவுகளாக தான் இருக்க வேண்டும்.
கழிவுகள்: இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்-கில் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகமாகும்... அதாவது நம் உடலில் தேவையில்லாமல் இருக்கும் தசைகள் அனைத்தும் கலோரியாக மாறுகிறது.. இதன்காரணமாக உடல் எடை குறைகிறது.. நாம் சாப்பிடுகின்ற 2 வேளை உணவு முழுமையா ஜீரணமாகி, அதோட கழிவுகளும் முழுமையாக வெளியேறிய பிறகு தான், அடுத்த உணவை எடுத்து கொள்ள நேரிடுகிறது.. இதனால், தேவையில்லாத கொழுப்புகள் உடம்பில் தங்காது. அத்துடன், நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை தானே அடையாளம் கண்டு, தானே சரி செய்து கொள்ளும்.. இன்டர்மிட்டண்ட் டயட் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த இன்டர்மிட்டண்ட் விரதமானது, கருமுட்டை, விந்தணுக்களின் தரத்தை பாதித்து, கருவுருதலுக்கே கேடு விளைவிக்கும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கைகள் வெளியாகி உள்ளன.. இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள்,குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஒரே ரசம்: இப்படி உணவுப்பழக்கம் மூலம் உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன.. அதில், இன்னொரு ஐடியாவையும் சொல்கிறார்கள்.. அதுதான், பீட்ரூட் ரசம்.. இதை சாப்பிடுவதால் நல்ல பலன்கிடைக்கிறதாம்.. காரணம், மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்டில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன.. அதுவும், 100 மில்லி பீட்ரூட் சாற்றில் வெறும் 35 கலோரிகள் தான் இருக்கிறது. இதை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். பீட்ரூட்டிர் புரதசத்து, நீர்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்துகள் உள்ளன..பீட்ரூட் - 1 கிண்ணம் தேங்காய் - 2 டீஸ்பூன் எண்ணெய்- 2 தேக்கரண்டி கடுகு- 1 தேக்கரண்டி சீரகம் - ½ டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - ½ தேக்கரண்டி பூண்டு- 2 கறிவேப்பிலை வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 புளி கரைசல் 1 வசந்த கறிவேப்பிலை 1/2 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 கப் புளி கூழ் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி தண்ணீர் - தேவையான அள
செய்முறை: பீட்ரூட் + தேங்காய் + உளுந்தம் பருப்பை மென்மையாக அரைத்து கொள்ளவும்.. பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை சேர்க்கவும்.. 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்தப்பிறகு, இதனுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் கரைசல் மற்றும் உப்பு சேர்த்துவிடவேண்டும்.. கொதி நிலை வந்ததுமே இறக்கி விடலாம்.. இந்த ரசத்தை சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.. சூப் போலவும் சாப்பிடலாம்.. டயட்டில் இருப்பவர்கள், தினமும் கூட ஒரு முறையாவது இந்த பீட்ரூட் ரசத்தை சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள்.