உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.. இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது சாத்தியமும் கிடையாது. அந்தவகையில், சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டி உள்ளது.
உடல் எடை குறைய வேண்டுமானால், என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பரவலாக தெரியும். ஆனாலும், உடல் எடை எதிர்பார்த்த அளவுக்கு சிலருக்கு குறைவதில்லை.
உடல் எடை: உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது அவசியம்.. சின்ன சின்ன தவறுகளிலும், பெரிய பெரிய விளைவுகள் வந்துவிடக்கூடும்.. இதோ சில டிப்ஸ்கள்:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், காலை உணவை தவிர்க்கக்கூடாது.. காலை உணவுதான் நம்முடைய அன்றைய நாளின் முதல் உணவு.. நாளெல்லாம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவது இந்த காலை உணவுதான்.. காலையில் சோம்பு தண்ணீரை குடித்துவிட்டு, முட்டை, பழ சாலட், ஸ்மூதி, காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
புரோட்டீன்: புரோட்டீன் உணவு அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. குறிப்பாக, கோழியின் மார்பகம், சிக்கன், மீன்களில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன.
கண்டிப்பாக துரித உணவுகள், வறுக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.. இனிப்பு நிறைந்த பானங்கள், இனிப்பு சாப்பாடுகளை சாப்பிடக்கூடாது.அதற்கு பதிலாக, ABC ஜூஸ் எனப்படும் ஆப்பிள், பீட்ரூட், காரட் வகை ஜூஸ்கள் + உணவுகளை சாப்பிடலாம்.. அடிக்கடி எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும்.. வேகவைத்த முழு தானியங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடினமான உடற்பயிற்சி கூடாது: கொழுப்பை கறைக்கவும், உடலை வலுவாக வைத்திருக்கவே உடற்பயிற்சியே தவிர, கடின உடற்பயிற்சிகளை தசை பிடித்து கொள்ளும் அளவுக்கு செய்யக்கூடாது.. உடற்பயிற்சி செய்வதால் நிறைய பசி எடுக்கும்.. அந்த பசிக்காக நிறைய சாப்பிட்டுவிடக்கூடாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய்: தினசரி பயன்படுத்தும் எண்ணெய் அளவு மிகவும் முக்கியம்.. காய்கறிகளை சமைக்கும்போது எண்ணெய்யே சமைக்காமல் சேர்க்க சொல்கிறார்கள்.. தேவைப்பட்டால் எண்ணெய்யை "ஸ்பிரே" செய்து கொள்ளலாம்.
சத்தான உணவு என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது, இதனால் எடை அதிகரிக்கும்.. உணவுக்கு மாற்றாக திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.. அதுக்காக வெறும் ஜூஸ் மட்டுமே குடிக்கக்கூடாது.. இதனால், பசி அதிகமாகும்.
உடல் எடையை குறைப்பதில் சூப் முக்கிய பங்காற்றுகிறது. காய்கறிகள் கொண்டு தயாரான சூப் மிகவும் குறைந்த கலோரி கொண்டது. அத்துடன் உடலுக்கு அதிக எனர்ஜியும் தரக்கூடியது என்பதால் தினமும் ஒரு சூப் குடிப்பதை கட்டாயப்படுத்தி கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டும்: டிவி பார்த்து கொண்டே சாப்பிடுவது, ஏதாவது வேலை பார்த்து கொண்டே சாப்பிடுவது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. சாப்பிடும் அளவு நமக்கு கட்டாயம் தெரியவேண்டும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும், எத்தனை கலோரிகள் இருக்கின்றன, அந்த உணவு ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு நன்மை தரக்கூடியது என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால், அதிக கலோரிகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழ வேண்டும்.. இரவில் வெகுநேரம் விழித்திருந்து, பகலில் வெகுநேரம் வரை தூங்கினால், அது உங்கள் எடை குறைப்பு முயற்சிகளை மொத்தமாக விணாக்கிவிடும்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். இதனால், உயர் ரத்த அழுத்தம், சுவாச பிரச்சினை, இதய பிரச்சினை போன்ற பாதிப்பு வருவதுடன் உடல் எடையும் கூடிவிடும்.
சுருக்கமாக சொல்லப்போனால், 80 சதவீதம், முழு தானியங்கள், புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள், பால் பொருட்கள், பழங்கள் பச்சை காய்கறிகளையும், 20 சதவீதம் நீங்கள் விரும்பும் உணவுகளையும் சாப்பிடலாம்.. ஆனால், டயட்டீஷியன் உதவியுடன் உடல்எடையை குறைப்பதற்கான முயற்சியில் இறங்குவது மிகவும் ஆரோக்கியமானது.