சுவையான... பலாக்கொட்டை சாம்பார் செய்வது எப்படி?

post-img

பலாப்பழத்தின் வெளிப்பகுதி கரடுமுரடாக இருந்தாலும், உட்பகுதி நன்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

இது தவிர பலாப்பழத்தின் விதையைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். ஆம், பலாக்கொட்டையைக் கொண்டு சாம்பார் செய்யலாம். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Pala Kottai Sambar Recipe In Tamil

உங்களுக்கு பலாக்கொட்டை சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாக்கொட்டை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • மங்களூர் வெள்ளரிக்காய் - 1 கப் (நறுக்கியது)
  •  பலாக்கொட்டை - 6 
  • துவரம் பருப்பு - 1 கப் 
  • புளிச்சாறு - 1 கப் 
  • பச்சை மிளகாய் - 2 
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
  • உப்பு - சுவைக்கேற்ப 
  • எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... 
  • துருவிய தேங்காய் - 1/2 கப்
  • சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு...
  • எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
  • வரமிளகாய் - 1 
  • கறிவேப்பிலை - சிறிது
  • செய்முறை:     முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து பலா கொட்டைகளை சேர்த்து, உப்பு தூவி 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
  • பின் அதை இறக்கி நீரை வடிகட்டிவிட்டு, தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சாம்பார் தூளை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் புளி நீரை ஊற்றி, பச்சை மிளகாய், மங்களுர் வெள்ளரிக்காய், மஞ்சள் தூள், தேங்காய் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பலா கொட்டைகளை சேர்த்து கிளற வேண்டும் .
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து கிளறினால், சுவையான பலாக்கொட்டை சாம்பார் தயார். 

Related Post