சுந்தர் பிச்சையின் வெற்றிக் கதை பல கோடி இந்தியர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது. இருப்பினும், அவரது பர்சனல் வாழ்க்கையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது என்றால் மிகையில்லை.
பலருக்கும் கருணை காட்டாத இந்த Cupid, சுந்தர் பிச்சைக்கு தனது கல்லூரி காலத்திலேயே அவருடைய அதிர்ஷ்ட தேவதையை காட்டியுள்ளது. பல்வேறு நேர்காணலில் சுந்தர் பிச்சை தனது 'அதிர்ஷ்ட தேவதை, Lucky Charm' என்று அழைக்கப்படும் அவருடைய காதலி - மனைவி அஞ்சலி பிச்சை பற்றி பேசும்போதெல்லாம் புன்னகை பூக்கிறது.
சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி பிச்சை காதல் கதை கல்லூரியில் தொடங்கியது, அங்கு தான் இருவரும் முதன் முதலில் சந்தித்து காதலித்தனர். சுந்தர் பிச்சையும் அஞ்சலி பிச்சையும் காரக்பூரில் உள்ள IIT கல்லூரியில் சந்தித்தனர், ஐஐடி கல்லூரியில் சுந்தர் பிச்சை மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தார், அதே பேட்சில் அஞ்சலி பிச்சையும் இருந்தார். இருவரும் நண்பர்களாக தங்கள் பயணத்தைத் தொடங்கி, பின்னர் காதலர், அதை தொடர்ந்து கணவன் மனைவியாக உயர்ந்துள்ளனர்.
ஒருமுறை சுந்தர் பிச்சை நேர்காணலில் பேசுகையில் தானும் அஞ்சலியும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலத்தில் காதலித்தது எவ்வளவு கடினம் என்பதை பகிர்ந்தார். "நான் அஞ்சலியை ஐஐடி காரக்பூரில் சந்தித்தேன், அவள் என் வகுப்புத் தோழி. பெண் விடுதியில் யாரையாவது அழைக்க வேண்டும் என்றால், நீங்கள் ஹாஸ்டல்-க்கு சென்று யாரையாவது அழைக்கும்படி வார்டனிடம் கேட்க வேண்டும். அவர்கள் உள்ளே சென்று சத்தமாகச் அஞ்சலி, சுந்தர் இங்கே உனக்காக வந்து இருக்கிறார் என்று கூறுவார்கள். இது பெரும் இம்சையானது என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்".
ஐஐடி கல்லூரியில் படிக்கும் வரையில் சுந்தர் பிச்சைக்கும் - அஞ்சலிக்கும் எந்த பிரச்சனைும் இல்லை, ஆனால் கல்லூரி முடிந்த பின்பு சுந்தர் பிச்சை இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றதால் இருவருக்கும் மத்தியிலான இடைவெளி அதிகரித்தது போல் காதலும் அதிகரித்தது. ஆனால் ஒருவரோடு ஒருவர் கைகோர்க்காமல் இருப்பது அவ்வளவு எளிதானவை அல்ல. இருவரும் தங்களின் வேலையை செய்து கொண்டிருப்பதாலும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இல்லாததாலும், திருமணத்தைப் பற்றி பேசாமலும், 6 மாதங்கள் எவ்விதமான தொடர்பும் இல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் அஞ்சலியும் அமெரிக்கா சென்று சுந்தர் பிச்சை உடன் இணைந்தார்.
அந்த நேரத்தில் சுந்தர் பிச்சை அமெரிக்காவில் செமிகண்டக்டர் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார், இதனால் சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி-யின் பெற்றோரிகளிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரினர். சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி திருமணம் செய்து கொண்டு புதுமணத் தம்பதிகளாக அமெரிக்காவில் வாழ்க்கையை துவங்கினர். சுந்தர் பிச்சை இப்போது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு அவர் ஒரு காரணம். அடிச்சிக்காதீங்க.
ஆரம்பத்தில், சுந்தர் பிச்சைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பதவி வழங்கப்பட்டது. இதுமட்டுமா ட்விட்டர் மற்றும் யாஹூ-விலிருந்து முக்கிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றார் சுந்தர் பிச்சை. இந்த வேலைவாய்ப்புகளை தேர்வு செய்ய சுந்தர் பிச்சை முயலும் போது அஞ்சலி தான் அறிவுரை கூறிய தடுப்பாராம். அப்போது அவள் சொல்வதைக் கேட்டதால் தான், இப்போது உலகின் மிகப் பெரிய நிறுவனமான கூகுளின் வெற்றிகரமான தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார் என சுந்தர் பிச்சை கூறுகிறார்.