ஆனால் இதன் விலை (Price) மிகவும் அதிகம். தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 23.38 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 27.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
எனவே மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் நாளை (ஏப்ரல் 26) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் காருக்கு எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) என பெயரிடப்பட்டுள்ளது.
எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி (Battery) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் (Range) 230 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், எலெக்ட்ரிக் கார் பயணிக்க கூடிய தொலைவுதான் இங்கே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.
எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் கார் அளவில் மிகவும் சிறியது ஆகும். இதன் நீளம் வெறும் 2,974 மிமீ மட்டுமே. அதே நேரத்தில் அகலம் மற்றும் உயரம் முறையே 1,505 மிமீ ஆகவும், 1,631 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் வீல்பேஸ் நீளம் 2,010 மிமீ ஆக உள்ளது.
அதே சமயம் இதன் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினின் பவர் அவுட்புட் 42 பிஹெச்பி மற்றும் 110 என்எம் டார்க் ஆக இருக்கலாம். எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காருடன், 3.3 kW சார்ஜர் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் முழுமையாக நிரப்புவதற்கு 7 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு 5 மணி நேரம் ஆகலாம். எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் வழங்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த கேள்விக்கு நமக்கு நாளை பதில் கிடைத்து விடும்.
இந்த எலெக்ட்ரிக் காரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகளும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்குகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் உள்ளே 10.25 இன்ச் அளவில் 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டருக்கானது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். தற்போதைய நிலையில் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே இந்த விலையில் கிடைத்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காருக்கு, டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகியவை நேர் எதிர் போட்டி மாடல்களாக (Rivals) இருக்கும். அளவில் சிறியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் பயன்படுத்துவதற்கு எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும்.