கர்ப்ப காலத்தில் வாந்தி, சரிவர உணவு எடுத்துக்கொள்ள முடியாமை போன்றவற்றால் சத்து குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டும். ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் தலைமுடியை பராமரிப்பது கடினமாக இருப்பதால் முடி கொட்டுவதற்கு காரணமாகலாம். ஆனால் பொதுவாக பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தலை காணலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது கரு குழந்தையின் எல்லா பாகங்களும் புதியதாக உருவாக வேண்டியிருப்பதால் தாய்க்கு அதிக அளவில் சத்து தேவைப்படுகிறது. எனவே தாயினுடைய உடலில் உள்ள எல்லா சத்துக்களும் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு சென்று விடுகின்றன. எனவே தாய்க்கு ரத்து குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தான் கர்ப்ப காலத்தில் சத்துள்ள உணவை தவறாமல் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது குழந்தையினுடைய வளர்ச்சிக்கு மட்டுமல்லாது முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளையும் தவிர்ப்பதற்கு உதவும். அதனால்தான் கூடுதலாக இரும்பு சத்து , கால்சியம் மாத்திரைகளைகளும் கர்ப்பிணிகளுக்கு தரப்படுகின்றன. அவர்களுடைய உடல் உள்ள சத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு முடி கொட்டுவதற்கு வாய்ப்பிருக்கும்.
பொடுகு அழுக்கு போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பலருக்கு தன் தலை முடியை பராமரிக்க முடியாததால் முடி கொட்டுவதற்கான காரணமாகிறது.
சிறு சிறு பிரச்சனைகள் கூட சில சமயங்களில் நமக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே எந்த ஒரு சிறு பிரச்சினையாக இருந்தாலும் அதை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுடைய கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ள முடியும்.