யார் அந்த சார்? இரட்டை அர்த்த வார்த்தைகள்.. ஃபாலோ பண்ணி தொல்லை செய்யும் பிரபலம்! கண் சிவந்த ஹனிரோஸ்

post-img
சென்னை: மலையாள தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹனிரோஸ், தன்னை குறித்து இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவர் அவதூறு பரப்புவதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் அவர் யார்? என ஹனிரோஸ் குறிப்பிடாத நிலையில், இது தொடர்பான அவரது பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாளத் திரை உலகில் இருந்து தமிழ், தெலுங்கு திரை உலகங்களில் நுழைந்து பிரபல நடிகையாக வளம் வருபவர் ஹனிரோஸ். 2005இல் நடிகையாக அறிமுகமான அவர் தமிழில் முதல் கனவே படத்தின் மூலம் கால் பதித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத நிலையில் ஜீவாவுடன் நடித்த சிங்கம் புலி படம் மட்டுமே ஆறுதல் அளித்தது. அதற்குப் பிறகு வெளியான படங்கள் கை கொடுக்காத நிலையில் தெலுங்கு திரையுலகில் ஒதுங்கினார். அங்கு பல படங்களை நடித்து வந்த அவர் கடைசியாக 2003 ஆம் ஆண்டு பாலையாவுக்கு அம்மாவாக நடித்தார். ஹனிரோஸை விட மூத்தவரான நடிகை ஸ்ருதி ஹாசன் பாலையாவுக்கு ஜோடியாக நடித்த நிலையில் இவர் அம்மாவாக நடித்தது அப்போது கேலி கிண்டலுக்கு ஆளானது. ஆனாலும் தெலுங்கு ரசிகர்கள் அவரை நடிகையாக ஏற்றுக் கொண்ட நிலையில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் அவ்வப்போது பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்ட ஒரு பதிவு தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னைக் குறித்து வேண்டுமென்றே ஒரு நபர் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரது பெயரை ஹனிரோஸ் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்," ஒரு நபர் வேண்டுமென்றே இரட்டை அர்த்த வார்த்தைகளால் பின்தொடர்ந்து அவமதிக்கும்போது, அந்தரங்கமானவர்கள் அத்தகைய அறிக்கைகளை அவர்கள் ரசிப்பதாலா அல்லது சொல்வதை ஏற்றுக்கொள்வதாலா என்று கேட்கிறார்கள். 'அந்த நபர்' என்னை ஒரு விழாவிற்கு அழைத்தபோது, நான் போக மறுத்ததற்குப் பழிவாங்கும் விதமாக, அவர் வேண்டுமென்றே நான் செல்லும் விழாக்களில் என்னை தப்பாக காட்ட முயற்சிக்கிறார். முடிந்தவரை ஊடகங்களில் என் பெயரை இழிவான முறையில் குறிப்பிடுகிறார். பணத்துக்காக ஒருவர் எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தலாமா? அவரது செயல்கள் முதன்மையாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக குற்றங்களாகும். அவரது பேச்சில் அந்த எண்ணம் இருப்பது எனக்கு தெரிய வந்தது. தனிப்பட்ட முறையில், மனவளர்ச்சி குன்றியவர்களின் இத்தகைய அழுகைகளை நான் அலட்சியத்துடனும் பரிதாபத்துடனும் புறக்கணிக்க முனைகிறேன். இது நான் பதிலளிக்கவில்லை என்று அர்த்தமல்ல.. ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம், இன்னொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை அவமதிக்கும் வகையில் இருந்தால் அது சுதந்திரமே இல்லை" என கூறியுள்ளார். அந்த பதிவில் தன்னை தொல்லை செய்யும் பிரபலத்தின் பெயரை ஹனிரோஸ் குறிப்பிடாத நிலையில் அவர் யார் என விவாதம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் தனக்கு தொல்லை செய்யும் நபரின் விவரத்தை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post