ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்.. திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக சிபிஎம் அறிவிப்பு

post-img
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையன் இன்று அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் நிற்கும் வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவளிக்கும் என்று மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி கடந்த 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் தேமுதிகவின் விசி சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கேஎஸ் தென்னரசு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த திருமகன் ஈவெரா களம் இறங்கி வெற்றி பெற்றார். இவரது தந்தைதான் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவா. ஆனால் ஈவேரா உடல்நலக்குறைவார் கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் இறங்கி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஈவிகே எஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் காலமானதால், மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கும் தேதியினை அறிவித்தது. அதன்படி, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனாகிய சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பமும் இதுவே என்பதால் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் யார் வேட்பாளராக இருந்தாலும் சிபிஎம் கட்சி ஆதரவளிக்கும் என்று மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெ சண்முகம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post