வேலூரில் AI கேமராவில் தெரிந்த "உருவம்"? ஸ்பாட்டுக்கு வந்த கலெக்டர்.. குடியாத்தம் வனப்பகுதியில் பரபர

post-img
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அஞ்சலி மரணத்துக்கு பிறகு, ஒட்டுமொத்த மக்களும் நிலைகுலைந்து காணப்படுகிறார்கள்.. குடியாத்தத்தை சுற்றியுள்ள வனப்பகுதி மக்களும், சிறுத்தை நடமாட்டம் காரணமா, மிகப்பெரிய அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி துருவம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்.. 70 வயதான இவர் ஒரு விவசாயி... மனைவி பெயர் வளர்மதி. இந்த தம்பதிக்கு 5 மகள்கள் இருக்கிறார்கள். இதில் 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.. 22 வயதான கடைசி மகள் அஞ்சலி, இளங்கலை வணிகவியல் பட்டதாரி ஆவார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு அஞ்சலி சென்றிருக்கிறார்.. அப்போது, அங்கு வந்த சிறுத்தை, அஞ்சலியை கடித்து குதறி கொன்றுவிட்டது. போராட்டம்: சிறுத்தையின் பிடியில் அஞ்சலி இருப்பதை கண்டு, அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.. ஆனால், அதற்குள் அந்த சிறுத்தை தப்பி ஓடிவிட்டது... பின்னர் தகவலறிந்த சப்-கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்துறையினர், கே.வி.குப்பம் போலீசார், அஞ்சலியின் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் சடலத்தை எடுக்கவிடாமல் அந்த பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, அஞ்சலியின் சடலத்தை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பான வழக்கையும் பதிவு செய்து விசாரணையை துவங்கினர். போஸ்ட் மார்ட்டம்: எனினும், சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி என்ற பட்டதாரி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தையே அதிர்ரர்ச்சிக்கு உள்ளாக்கியது.. ஏற்கனவே, குடியாத்தம் அருகே வீரிசெட்டிபள்ளி, அனுப்பு, காந்தி கணவாய் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை தாக்கியதில், ஆடுகள், கோழிகள், கன்று குட்டி போன்றவை இறந்து வருகின்றன. சில நாட்களுக்குமுன்புகூட காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு ஒன்று இறந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், பரதராமி, அனுப்பு, காந்தி கணவாய், மோடிகுப்பம் , மோர்தானா , ரங்கசமுத்திரம் , பேரணாம்பட்டு உள்ளிட்ட வன பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் தகவல் பரவியதால் அந்த பகுதியிலுள்ளவர்கள் எல்லாம் கலக்கம் அடைந்தனர். ஆடு, பசுமாடு: இந்நிலையில், அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக, காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.. இந்த கேமராக்கள், 24 மணி நேரமும் வனப்பகுதியில் வரும் உயிரினங்களை பதிவு செய்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பிவிடும். இந்த அதிநவீன கேமராவை, அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேற்று, குடியாத்தம் காந்திகணவாய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் சிறுத்தை ஒன்று பதுங்கி நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.. அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் ஒரு நிமிடம் நின்ற சிறுத்தை, சுற்றும் முற்றும் பார்த்து, துப்பாக்கி சத்தத்தைக் கேட்டதுமே, வாலை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தது. அதாவது, துப்பாக்கி சுடும் சத்தம், ஆம்புலன்ஸ் ஒலி, ஜீப்பில் பயன்படுத்தப்படும் ஹாரன் ஒலி என 50-க்கும் மேற்பட்ட ஒலிகளை, இந்த ஏஐ கேமராவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த துப்பாக்கி சத்தத்தை கேட்டுதான் சிறுத்தை ஓடியிருக்கிறது. கேமராவில் உருவம்: இதனிடையே, சிறுத்தை வந்து சென்ற காட்சிகள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்துள்ளது.. பிறகு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது... இதையடுத்து, வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, ஆர்டிஓ சுபலட்சுமி ஆகியோர், குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் கிராம வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை மெதுவாக பதுங்கி நடந்து வருவது கேமராவில் பதிவாகியிருந்தது. எனவே, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபாவுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.. ஏஐ தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட கேமராவில் அசையும் எந்த பொருளையும் உடனடியாக உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறுத்தை சிக்கும் என்கிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post