வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

post-img
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்யும் வாய்ப்பை இன்ஸ்டாஹைர் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Instahyre (இன்ஸ்டாஹைர்) என்பது ஏஐ அடிப்படையிலான ஒரு ஹயரிங் பிளாட்பார்ம் ஆகும். இந்த இன்ஸ்டாஹைர் நிறுவனத்தில் இருந்து தான் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: இன்ஸ்டாஹைர் நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Full Stack Developers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் AWS, Django, Golang, Ruby, TypeScript உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணியில் 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதன்படி மேற்கூறிய திறமைகள் இருப்பின் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம், ஆண்டு சம்பளம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். அதேபோல் ஹெல்த் மற்றும் Dental இன்சூரன்ஸ் வசதி என்பது செய்து கொடுக்கப்பட உள்ளது. அதோடு இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் விண்ணப்பத்திற்கான காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு 2 வகைகளில் இண்டர்வியூ என்பது இருக்கும். முதலில் Proficient in the required skills இருக்கும். அதன்பிறகு 2வதாக 30 முதல் 60 நிமிடம் வீடியோ காலில் இண்டர்வியூ என்பது இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post