ரிசர்வ் வங்கியில் வேலை.. மாதம் 80,000 சம்பளம்.. டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

post-img
சென்னை: நாட்டின் கருவூலம் என்றழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில், ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 82,286 சம்பளமாக கிடைக்கும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி நாட்டின் கருவூலம் என்றும் அழைக்கப்படுகிறது. 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, வங்கிகளின் வங்கியாக செயல்படுகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த வங்கிக்கு சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் கிளைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 11 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். பணியிடங்கள்: ஜூனியர் இன்ஜினியர் சிவில் - 7 ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்கல் - 4 என மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் படிப்பு கொண்ட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படிப்பு அல்லது இன்ஜினியரிங் டிகிரி முடித்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது அவசியம். டிப்ளமோ முடித்தவர்கள் என்றால் 2 ஆண்டுகள் பணி அனுபவமும், டிகிரி முடித்தவர்கள் என்றால் ஓராண்டும் பணி அனுபவமும் கட்டாயம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் எவ்வளவு: ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) - ரூ. 80,236 ஜூனியர் இன்ஜினியர் ( எலக்ட்ரிக்கல்) - ரூ. 80,236 தேர்வுமுறை: ஆன்லைன் மூலமாக எழுத்து தேர்வும், மொழித்தேர்வு ஆகியவை அடிப்படையின் தேர்வு நடைபெறும். நாடு முழுவது முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் நடைபெறும். ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.450 செலுத்த வேண்டும். எஸ்டி/எஸ்சி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.50 கட்டணம் ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://opportunities.rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 30.12.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2025 தேர்வு அறிவிப்பினை படிக்க: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPJECERBI30122024FBB1D4630E1694AA89541F29A1F87A7B3.PDF இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Related Post