Weather Data Source: Wettervorhersage 21 tage
எம்பிஏ பட்டதாரிகளே நோட் பண்ணுங்கப்பா.. 40 ஆயிரம் சம்பளத்தில் சூப்பர் வேலை! புத்தாண்டு அசத்தல் ஆஃபர்!
- by Anandaraj K
- January 01, 2025
திண்டுக்கல்: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் "பிளேஸ்மெண்ட் ஆபீசர்" காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் எம்பிஏ பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்கும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரமாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளது. தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பெற முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 மாதம் மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்பு, 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பு என 36 வகையான தொழில் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வேளான் சார்ந்த படிப்புகளுக்கும், சுகாதாரத்துறை சார்ந்த படிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர்/பகுதி நேர ஆசியர்கள் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் பெயர் : placement officer ( temporary basis )
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20. 01.2025 11.00 AM
தேர்வு செய்யப்படும் முறை: நேரடி நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20. 01.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் எம்பிஏ அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். ஐந்து முதல் 8 ஆண்டுகள் கல்வி நிறுவனங்கள் அல்லது அதற்கு இணையான அனுபவத்துடன் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தேர்வு அதிகாரி பணியில் இருந்திருக்க வேண்டும்.
ஊதிய விபரம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின் படி மாதம் 40,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
முகவரி: Board room, administrative block, The Gandhigram Rural Institute, Gandhigram - 624302, Dindigul, Tamil Nadu.
விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய: https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/20241227_1.pdf
விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான அசல் சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு வரும்போது நேரில் கொண்டு வர வேண்டும்.
விதிமுறைகள்:
1. நேர்காணலின் போது விவரங்களின் அசல் ஆதாரங்களைத் தவறாமல் வழங்க வேண்டும்
2. விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும்.
Related Post
ரயில்வேயில் வேலை.. 4 ஆயிரம் பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..
December 30, 2024
டிகிரி போதும்.. சென்னையிலேயே ஐடி வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
December 23, 2024
Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. தென்காசியில் பணி நியமனம்!
December 23, 2024
தெற்கு ரயில்வே சென்னை வேலைவாய்ப்பு 2023, 124 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
6160 பணியிடங்கள்! பாரத ஸ்டேட் வங்கியில் புதிய வேலை அறிவிப்பு!
September 08, 2023
Sainik School அமராவதி நகர் வேலைவாய்ப்பு 2023, 06 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
NHM கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2023, 35 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
Indian Navy Tradesman Mate வேலைவாய்ப்பு 2023, 362 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
DHS திருவண்ணாமலை வேலைவாய்ப்பு 2023, Pharmacist பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
DGGI வேலைவாய்ப்பு 2023, Tax Assistant, Executive Assistant பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023, 06 Guest Faculty காலியிடங்கள்
September 08, 2023
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023, 09 Teaching Fellow பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
Aavin கால்நடை மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2023
August 25, 2023
கர்நாடகா: . செமிகண்டக்டர் துறையில் புதிய தொழிற்சாலை..!
August 25, 2023
CGHS வேலைவாய்ப்பு 2023, Accountant பணியிடங்கள் உள்ளன
August 20, 2023
போக்குவரத்து துறையில் டிரைவர் பணி நியமன அறிவிப்பு..?
July 26, 2023
NPCIL இல் 'அப்ரண்டிஸ்' பணி வாய்ப்பு...!
June 29, 2023
BYJUs மீண்டும் பணிநீக்கம்.. 1000 பேர் கண்ணீர்..!
June 21, 2023
தென்காசி கைய்ஸ்.... எம்.எஸ்.ஆபீஸ் படிச்சிருக்கீங்களா?
June 15, 2023
லேபாரட்டரி டெக்னீசியன் 332 பேருக்கு பணி வாய்ப்பு..!
June 14, 2023
எழுத்து தேர்வு இல்லாமல் ஐ.சி.எஃப்.,ல் பணி?
June 08, 2023
மத்திய அரசின் மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம்...?
May 05, 2023
நோ எக்ஸாம்...! மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்..!
April 25, 2023
மதுரை, திருப்பூர் யூத்ஸ்... ஆவினில் வேலை காத்திருக்கு...!
April 23, 2023