முதல் நாளிலேயே சம்பவம்.. டென்ஷன் ஆன சபாநாயகர்.. அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

post-img
சென்னை: இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பேரவை தொடங்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்தது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்து, இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த இருந்தார். 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ரவி. தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கடந்த முறையும் ஆளுநர் ரவி, அரசியல் விவகாரமாக ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது. "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயர் உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post