கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்தம் 31.85 லட்சம் வாக்காளர்கள்

post-img
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 31 லட்சத்து 85 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15,58,678 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் வாக்காளர் சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணிகள் அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம், திருத்தம் செய்ய பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலானது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 31 லட்சத்து 85 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15,58,678 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மேட்டுப்பாளையத்தில் 1,49,826 ஆண் வாக்காளர்கள், 1,62,018 பெண் வாக்காளர்கள், 47 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,11,891 வாக்காளர்கள் உள்ளனர். சூலூரில் 1,62,086 ஆண் வாக்காளர்கள், 1,72,126 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,34,311 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையத்தில் ஆண் வாக்காளர்கள் 2,43,839, பெண் வாக்காளர்கள் 2,47,143, மூன்றாம் பாலினத்தவர் 151 என மொத்தம் 4,91,143 வாக்காளர்கள் உள்ளனர். கோவை வடக்கு மாவட்டத்தில் 1,73,043 ஆண் வாக்காளர்கள், 1,72,855 , 36 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,45,934 வாக்காளர்கள் உள்ளனர். தொண்டாமுத்தூரில் 1,68,227 ஆண் வாக்காளர்கள், 1,74,557 பெண் வாக்காளர்கள், 144 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,42,928 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு மாவட்டத்தில் 1,21,431 ஆண் வாக்காளர்களும், 1,23,398 பெண் வாக்காளர்களும், 34 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,44,863 வாக்காளர்கள் உள்ளனர்; சிங்காநல்லூரில் 1,66,199 ஆண் வாக்காளர்கள், 1,70,611 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 3,36,842 வாக்காளர்கள் உள்ளனர். கிணத்துக்கடவில் 1,70,808 ஆண் வாக்காளர்களும், 17,89,63 பெண் வாக்காளர்களும், 44 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 3,49,815 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சியில் 1,08,969 ஆண் வாக்காளர்களும், 1,20,073 பெண் வாக்காளர்களும், 44 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,29,086 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறை தொகுதியில் 94,250 ஆண் வாக்காளர்கள், 1,04,505 பெண் வாக்காளர்கள், 26 மூன்றாம் வாக்காளர்கள் என மொத்தம் 1,98,781 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பச்சி.ல் அனைத்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா, தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என இந்த அலுவலகங்களில் உறுதி செய்து கொள்ளலாம். மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும். www.voters.eci.gov.in எனும் இணைய முகவரியின் மூலமாகவோ அல்லது Voters Helpline App மூலமாகவோ பொதுமக்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post