சியோல்: 181 பேருடன் பயணித்த Jeju Air Flight 2216 இன்று அதிகாலை பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த்தாஹ் 179 பேர் பலியானார்கள். 2 பேர் மட்டும் தப்பித்தனர்.
தாய்லாந்தில் இருந்து திரும்பிய Jeju Air Flight 2216 விமானம் தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 28 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, விமானம் சுவற்றில் மோதிய உடன் தீப்பிடித்தது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் அவர்கள் மட்டும் தப்பித்தது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்கள் இருவரும் கடைசி ரோவில் அமர்ந்து இருந்தனர். இரண்டு பேருமே ஜன்னல் பக்கம் இருந்துள்ளனர். அருகிலேயே எமர்ஜென்சி கதவும் இருந்துள்ளது. இதனால் அவர்கள் எளிதாக தப்பித்துள்ளனர். மற்றபடி விபத்தில் சிக்கிய எல்லோரும் உடல் நசுங்கி.. அதன்பின் தீயில் கருகி பலியாகி உள்ளனர். முன் பக்கம் முதல் கடைசி ரோவிற்கு முன்பு வரை விமானம் நசுங்கி வெடித்தது. இதனால் மற்ற எல்லோரும் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்திற்கு பின் தொழில்நுட்ப பிரச்சனைதான் காரணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கும். விமானத்தில் பிளாக் பாக்ஸ் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் விசாரணை தொடங்கும் என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். தென்கொரியாவில் ஏற்கனவே அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு இடையே இந்த விபத்து அரசுக்கு எதிராக மாறி உள்ளது.
விமானம் தரையிறங்க முயன்ற போது லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. இதையடுத்து 5 முறை விமானம் வட்டமடித்து உள்ளது. லேண்டிங் கியரை இறக்க முயன்று உள்ளனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. சரி என்று விமானத்தின் எரிபொருள் தீரும் வரை விமானத்தை சுற்றியபடி இருந்துள்ளனர். அதன்பின் விமானத்தை பெல்லி லேண்டிங் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து பிரிந்து.. சர்ரென சாலையில் சறுக்கி சென்று உள்ளது. அதோடு விமானத்தின் சக்கரங்கள் வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளது. இப்படி விமானம் சரிந்துபடியே சென்று சுவற்றில் சட்டென மோதி உள்ளது. மோதிய உடன் விமானம் தீ பிடித்து பற்றி எரிந்து உள்ளது.
இந்த விபத்து தொடர்பான திகிலூட்டும் காட்சிகள் வெளியாகி வருகிறது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் போயிங் 737-800, தரையிறங்கும் போது லேண்டிங் கியர் வேலை செய்யாமல் போனதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து "பெல்லி லேண்டிங்" செய்ய அந்த விமானம் முயன்றுள்ளது. அந்த பெல்லி லேண்டிங் பயன் அளிக்கமால் விமானம் சறுக்கி சென்று சுவற்றில் மோதி உள்ளது. பெல்லி லேண்டிங் செய்ய ஓடுபாதையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் விமானம் தரையிறங்கிய உடன் அது கட்டுப்பாடின்றி செல்ல தொடங்கியது. பெல்லி லேண்டிங் செய்த உடன் மிக மிக வேகமாக விமானம் சறுக்கி சென்றது. அப்படியே சென்று அந்த விமானம் சுவற்றில் மோதியது.
விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியர் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் இருந்து திரும்பிய விமானம், தரையிறங்க முயன்றபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 28 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.