அமெரிக்காவில் இப்போது உயிர் வாழும் 3 மாஜி அதிபர்கள் யார்? இளம் அதிபர் யார்! வயதானவர் யார் தெரியுமா?

post-img
வாஷிங்டன்: அமெரிக்காவில் வயதான மாஜி அதிபர் என்ற சிறப்பை பெற்றிருந்த ஜிம்மி கார்ட்டர் நேற்று தனது 100வது வயதில் காலமானார். இதன் மூலம் தற்போது உயிருடன் இருக்கும் வயதான அதிபர் அல்லது மாஜி அதிபர் என்ற சிறப்பை பைடன் பெறுகிறார். இது ஒரு பக்கம் இருக்க 200 ஆண்டு ஜனநாயகமான அமெரிக்காவில் இப்போது எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை நமது நாட்டை போலச் சாகும் வரை எல்லாம் டாப் பதவிகளில் இருக்க முடியாது. அங்கு யாராக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அங்கு கிட்டதட்ட 75 ஆண்டுகளாகவே இதை நடைமுறை தான் தொடர்கிறது. 1951ம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தச் சட்டத்தால் ஒருவருக்கு எத்தனை வயதாக இருந்தாலும் இரண்டு முறை மட்டுமே அதிபராகத் தொடர முடியும். அதிபர் பதவி வகித்தவர்கள் அதன் பிறகு எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டார்கள் என்ற போதிலும், முன்னாள் அதிபர்கள் என்பதால் அவர்களின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். மேலும், ஒபாமா உள்ளிட்டோருக்கு இன்னுமே கூட கட்சி மற்றும் மக்களிடையே அளவில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் அங்கு மாஜி அதிபர்கள் குறித்த செய்திகள் எப்போதும் முக்கியத்துவம் பெறும். இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் மிகவும் வயதான முன்னாள் அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 100 ஆகும். இதன் மூலம் தற்போது வாழும் வயதான அதிபர் அல்லது மாஜி அதிபர் என்ற சிறப்பை 82 வயதான பைடன் பெற்றுள்ளார். அதேபோல தற்போது அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், கடந்த 2001 முதல் 2009 வரை அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷை காட்டிலும் 22 நாட்கள் மூத்தவர் ஆவார். 2024 அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், அடுத்தாண்டு ஜன. 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அதிபராக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் அதிக வயதில் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்கும் நபர் என்ற பெயரை டிரம்ப் பெறுகிறார். அமெரிக்கா இதுவரை 46 அதிபர்களைப் பார்த்துள்ளது. இருப்பினும், அதில் மூன்று பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கிறார்கள். அதில் அதிக வயதானவர் என்றால் அது ஜார்ஜ் புஷ் தான். 2001 முதல் 2009 வரை அதிபராக இருந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷுக்கு இப்போது வயது 78 ஆகும். அவருக்குப் பிறகு அதிக வயதான முன்னாள் அதிபர் என்றால் அது பில் கிளிண்டன் தான். 1993 முதல் 2001 வரை 8 ஆண்டுகள் அதிபராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டனுக்கு இப்போது வயது 78 ஆகும். அமெரிக்க வரலாற்றில் இளம் வயதில் அதிபரானோர் லிஸ்டில் இவர் 3வது இடத்தில் இருக்கிறார். அடுத்து இந்த லிஸ்டில் இருக்கும் கடைசி மாஜி அதிபர் பராக் ஒபாமா. 2009 முதல் 2017 வரை அதிபராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவுக்கு இப்போது வயது 63ஆகும். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமாவுக்கு இன்னுமே கூட அங்கு மக்களிடையே கணிசமான அளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒபாமா தீவிரமாகப் பிரச்சாரமும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post