நெல்லை டூ சென்னை.. திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்றப்படுமா? தென் மாவட்டம் ஆர்வம்

post-img
திருநெல்வேலி: வந்தே பாரத் ரயிலின் சேவைக்கான வரவேற்பு பொதுமக்களிடமிருந்து அபரிமிதமாக கிடைத்து வரும்நிலையில் விரைவில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. நெல்லை வந்தே பாரத்: மறுமார்க்கத்தில் மதியம்2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இந்த ரயிலில் 7 AC சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், சென்னை மட்டுமின்றி இவ்வழித்தடத்தில் உள்ள மற்ற ஊர்களுக்கும் செல்ல நேரம் ஒத்துப்போவதால் பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் வசதியாக உள்ளது. சேவை அதிகரிப்பு: அதுமட்டுமல்லாமல், சென்னைக்கு பல ரயில்கள் இருந்தும் வேகம், சவுகரியம் காரணமாக இதற்கான தேவையும் அதிகரித்துள்ளதால், காத்திருப்போர் பட்டியல் எப்போதும் 100க்கும் மேல் உள்ளது. அதனால், இந்த ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க பயணிகளிடத்தில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று என தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் பத்மநாதன் வலியுறுத்தினார். இதுகுறித்து, ரயில்வே கூடுதல் பொது மேலாளர்கவுஷல் கிஷோரிடம் பத்மநாதன் வலியுறுத்தியும் உள்ளார். 16 பெட்டிகள்: ''திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன்இயங்கினால் தென்மாவட்டத்தினர் அதிகம் பயன்பெறுவார்கள்.. ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். மற்ற ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் சென்னை செல்ல இந்த ரயிலை பயன்படுத்த முன்வருவார்கள்" என்று பத்மநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி - திண்டுக்கல் சேவை மாற்றம்: - குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (வெள்ளிக்கிழமை), 6, 8, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது. - கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666), நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது. - எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), வரும் 7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 7-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும். - எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து க காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும். - நாகர்கோவிலில் இருந்து வரும் 9, 11 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post