கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. சிவகங்கையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் உடல் நலக்குறைவு

post-img
மதுரை: இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்க சிவகங்கை சென்று இருந்த கங்கை அமரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டுள்ளார். தமிழக திரையுலகில் இசையமைப்பாளர், இயக்குனர் என தனக்கென தனி இடம் பிடித்து இருப்பவர் கங்கை அமரன். கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ள கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் ஆவார். 77-வயதான கங்கை அமரன் சிவகங்கை அருகே நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்க சென்று இருந்தார். மானாமதுரை மற்றும் சிவகங்கை சுற்று வட்டாரப்பகுதிகளில் ஷூட்டிங்க் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த கங்கை அமரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கங்கை அமரன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனை அடுத்து மேல் சிகிச்காக மதுரைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார். கங்கை அமரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது தகவலால் அவரது உறவினர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மௌன கீதங்கள் மற்றும் வாழ்வே மாயம் போன்ற பல படங்களுக்கு கங்கை அமரன் இசை அமைத்துள்ளார். கோழி கூவுது என்ற படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு ஆண்டு இயக்குனராகவும் கங்கை அமரன் அறிமுகம் ஆனார். மேலும் மிகவும் வெற்றிகரமான கரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 1997- ஆம் ஆண்டு வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் படத்திற்கு பிறகு இவர் படங்கள் எதையும் இயக்கவில்லை. கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு தமிழக திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ளார். பிரேம்ஜி அமரன் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post