இரவில் பார் டான்ஸ்.. சென்னை கிளப்பில் யாரந்த பெண்கள்? பறந்த டம்மி ரூபாய்கள்! சாட்டைய சுழட்டிய போலீஸ்

post-img
சென்னை: சென்னையில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதற்காக சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி வரும்நிலையில், இளம்பெண்களை வைத்து மீண்டும் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக தனியார் பார் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் பார் ஒன்றில் இரவு நேரங்களில் டிஜே இசைக்கு ஏற்ப, அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களின் ஆபாச நடன நிகழ்ச்சி நடப்பதாக எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில், இந்த தனியார் கிளப் இயங்குவதாக தெரிகிறது. நள்ளிரவு வரை அத்துமீறி, ஆபாச நடனமாடுவதாக, அதிதீவிர குற்றத்தடுப்பு போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து, கடந்த 13ம் தேதி நள்ளிரவு, அங்கு சென்று போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட தனியார் பார், விதிமீறிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் புகார்: இதையடுத்து, முகப்பேரை சேர்ந்த 47 வயது கிளப் ஓனர் தாணு, மற்றும் ஓட்டலின் சப்ளையர்கள் வினோத்குமார் 33, பாலமுருகன் 22, கொடிஷ் 27, அக்கவுண்டன்ட் விஜயா அமிர்தராஜ் 38 உள்ளிட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. இந்த சம்பவம் நடந்தது எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் என்பதால், வழக்கை, எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றி, 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், கடந்த மாதம் 27ம் தேதியே இவர்கள் அனைவருமே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள்.. அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டம் இருந்ததால், மறுபடியும் இளம்பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். இளம்பெண்கள்: எனவே, மறுபடியும் போலீசுக்கு புகார் சென்றது. இதையடுத்து, போலீசார் கடந்த 4ம் தேதி ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வரும் தனியார் பாரில் திடீர் சோதனையை நடத்த உள்ளே நுழைந்தார்கள்.. அப்போது இளம் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் மிகவும் ஆபாசமாகவும், போதையிலும் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார்களாம். அதிலும் அரசு அனுமதி நேரத்தை கடந்து, பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதால், கிழக்கு முகப்பேர் ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பார் உரிமையாளர் தாணு , விருதுநகர் மாவட்டம் கிழக்கு சிவகாசி காமராஜர் நகரை சேர்ந்த பார் காசாளர் விஜய் அமிர்தராஜ் (38), மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வினோத் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டம்மி நோட்டு: இவர்களிடமிருந்து இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய ஸ்பீக்கர்கள், டம்மி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பார் உரிமையாளர் தாணு மீது, இதுபோல் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.. இத்தனைக்கும் கடந்த மாதம் 27ம் தேதிதான் ஜெயிலிலிருந்து வெளியே வந்தார். இப்போது மறுபடியும் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதற்காக கைதாக சிறைக்கு சென்றுள்ளார். கடந்த வாரம் சென்னையில் உள்ள மற்றொரு ஹோட்டலிலும், பெண்களை ஆபாச நடனம் ஆட வற்புறுத்தியதாக இசைக்குழுவைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு பெண் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழு ஹோட்டலில் கண்காணிப்பு நடத்தியது. அப்போது, டிசம்பர் 31, 2024 அன்றைய தினம் மட்டும், இசை நிகழ்ச்சியை நடத்த குழு அனுமதி பெற்றிருந்ததாம். அதிரடி சோதனை: எனினும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ரூ.23 ஆயிரம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்... அந்தவகையில், சென்னையில் இதுபோல் அனுமதியின்றி நடத்தப்படும் ஆபாச நடன நிகழ்ச்சிகளை கண்டறிந்து, அவைகளை முற்றிலும் களையும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post