ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு.. டிரம்புக்கு பிடியை இறுக்கிய நீதிபதி! ஆனா ஒரு சின்ன டிவிஸ்ட்

post-img
நியூயார்க்: தன்னுடன் இருக்கும் உறவு குறித்து தேர்தல் நேரத்தில் வாய் திறக்க கூடாது என, ஆபாச பட நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜன.10ம் தேதி தண்டனை விவரத்தை அறிவிக்க இருக்கிறது. எக்கச்சக்கமான பஞ்சாயத்துக்களுக்கு நடுவே ஒருவர் அதிபராக தேர்வாகிறார் எனில், அது டொனால்ட் டிரம்பாகத்தான் இருக்க முடியும். தற்போது இவரது பஞ்சாயத்துகளில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கும் சேர்ந்திருக்கிறது. ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர் அமெரிக்காவின் பிரபல ஆபாசப்பட நடிகையாவார். இவருக்கும் டிரம்புக்கும் இடையே ஒரு காலத்தில் உறவு இருந்திருக்கிறது. இதற்கிடையில் 2016ல் டிரம்ப் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். இந்த நேரம் பார்த்து ஸ்டார்மி டேனியல்ஸ் எதும் வாய் திறந்துவிட்டால் தன்னுடைய செல்வாக்கு சரிந்துவிடும் என்று பயந்த டிரம்ப், அவருக்கு பணம் கொடுத்திருக்கிறார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். வரும் 20ம் தேதி அவர் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இப்படி இருக்கையில், வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் டிரம்ப் மேல் முறையீடு செய்திருக்கிறார். ஆனால் அந்த மனுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மனுவை நீதிபதி மெர்ச்சன் விசாரித்துள்ளார். அதில், டிரம்ப் குற்றவாளி என்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே தண்டனை விவரம் குறித்து ஜன.10ம் தேதி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். டிரம்ப் புதிய அதிபராக தேர்வாக இருப்பதால், சிறை தண்டனை அல்லாமல், வெறுமென அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் வரலாற்றில், குற்ற வழக்குடன் ஒருவர் அதிபராக பதவியேற்கிறார் எனில் அது டிரம்பாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னரும் டிரம்ப் பல பஞ்சாயத்துகளில் சிக்கியிருக்கிறார். அதாவது 2021ம் ஆண்டு அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் அவர் தொற்று போனார். ஆனால் அவரது தோல்வியை ஏற்காத ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை சூறையாடினர். இது ஒட்டுமொத்த அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்னரும் ஏராளமான தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல முக்கிய நபர்கள் தோற்று போயிருக்கிறார்கள். ஆனால் யாரும் இப்படி, அராஜகத்தில் ஈடுபட்டது கிடையாது. டிரம்ப் வகையறா மட்டும்தான் இதுபோன்ற அழிச்சாட்டியங்களில் ஈடுபடுகின்றனர் என்று அரசியல் விமர்சகள் குற்றம்சாட்டியிருந்தனர். இது குறித்த வழக்கும் டிரம்ப் தலையில்தான் வந்து விடிந்தது. சொந்த கட்சிக்காரர்களை கூட உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையே, நாளை பின்னர் அதிபரானால், நாட்டின் முக்கிய படைகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? என்று நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தது. இப்படியான பஞ்சாயத்துக்கு நடுவில்தான் ஜன.20ம் தேதி டிரம்ப் மீண்டும் புதிய அதிபதாக பதவி ஏற்க இருக்கிறார். அவர் பதவி ஏற்பதற்கு முன்னர் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அவருக்க சிறை தண்டனை விதிக்கப்படுமா? என்று அவரது ஆதரவாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஒருவேளை சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அமெரிக்காவில இன்னொரு கலவரம் கூட வெடிக்கலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post