பிரம்மபுத்திராவில் பிரமாண்ட அணை! பகிரங்க வார்னிங் கொடுத்த இந்தியா!

post-img
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்கே பிரமாண்டமான அணை கட்ட சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. எதிர்ப்பு: அணை குறித்து பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த திட்டம் குறித்து இந்தியா கவலையை தெரிவித்துக்கொள்கிறது. பிரம்மபுத்திரா நதியில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதன் அடிப்படையில் இதனை தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மிக அவசியம். இப்போதைக்கு நாங்கள் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம். எங்களுடைய வலியுறுத்தல்கள் எல்லாம், நதியை நம்பியிருக்கும் மாநிலங்களை வறட்சியில் தள்ளக்கூடாது என்பதுதான். இந்த அணை குறித்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் சீனா கலந்துரையாட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு பாதிப்பு: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் தொடங்கி அசாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நீர் ஆதாரமாக பிரம்மபுத்திராக இருக்கிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் யார்லங் சாங்போ என்கிற பெயரில் உருவாகும் பிரம்மபுத்திரா நதியானது, திபெத்திலிருந்து இந்தியாவின் எல்லை வரை சுமார் 1,625 கி.மீ தொலைவுக்கு இதே பெயரில் பாய்கிறது. இந்தியாவில் நுழைந்த பின்னர் பிரம்மபுத்திராகவாக 918 கி.மீ தொலைவுக்கு வங்கதேசம் வரையிலும், அங்கிருந்த 337 கி.மீ வங்கக்கடல் வரையிலும் இது பாய்கிறது. சீனாவின் திட்டம்: இந்த நதியின் குறுக்கே அணையை கட்டி 60,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிகப்பெரிய அணையாக இததான் இருக்கும். இதிலிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் டெல்லி போன்று 7 நகரங்களுக்கு போதுமானதாக இருக்கும். அதாவது இந்தியாவில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் மாநிலங்களில் டெல்லி முதன்மையாக இருக்கிறது. இங்கு 7000 மெகவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அப்படியெனில் டெல்லியை போன்று 7 பெரிய நகரங்களுக்கு போதுமான மின்சாரத்தை இந்த அணை மூலம் சீனா உற்பத்தி செய்கிறது. அந்நாட்டின் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் பகுதியாக இந்த அணை இருக்கிறது என்பதால், இதை நிச்சயம் அந்நாட்டு கட்டி முடித்தே தீரும். வேறு எந்த நாடுகளுக்கு பாதிப்பு?: இந்தியா, வங்கதேசம் மட்டுமல்லாது நேபாளம், பூடான், பாகிஸ்தான், வியட்நாம், தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்த நதி நீரால் வளம் பெற்று வருகின்றன. ஒருவேளை சீனா திட்டமிட்டபடி அணையை கட்டிவிட்டால் அது இந்த நாடுகளை கடுமையாக பாதிக்கும். கோடை காலங்களில் இந்த நாடுகள் வறட்சிக்கு ஆளாகிறது எனில் அதற்கு முக்கிய காரணம் சீனாவின் அனையாகத்தான் இருக்க முடியும். திபெத்தில் உற்பத்தியான மேக்கொங் நதியில் சீனா கட்டியிருந்த அணை காரணமாக, கடந்த 2019ம் ஆண்டு தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகள் நீரின்றி தவித்தன. அந்த ஆண்டின் கோடைக்காலத்தில் இந்த நாடுகள் கடும் வறட்சியை சந்திருந்தது. நிலநடுக்க அபாயம்: வறட்சி ஒருபுறம் எனில், மற்றொருபுறம் நிலநடுக்க அபாயமும் இருக்கிறது. அதாவது இமயமலை பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. உலகத்திலேயே பெரிய அணை, நிலநடுக்கம் காரணமாக உடைந்தால், நதிக்கரையை ஒட்டியுள்ள மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் முற்றிலுமாக சர்வநாசம் ஆகிவிடும். இதற்கு சீனா என்ன பதில் சொல்லப்போகிறது என்பது எல்லாம் கேள்வியாக எழுந்திருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post