இந்தியா பக்கம் வீசும் காற்று.. தாலிபான்களால் பலவீனமாகும் பாகிஸ்தான்! நல்ல சான்ஸ் இது

post-img
டெல்லி: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே முட்டல் மோதல் போக்குகள் தீவிரமடைந்து வருகின்றன. இது போராக வெடிக்கும் பட்சத்தில், போரில் ஆப்கான் ஜெயித்தால் இந்தியாவுக்கு ஏராளமான நன்மைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிரச்சனை என்ன?: கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி பலூசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டு 32 அப்பாவி உயிர்களை பலி வாங்கியது. 62 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதற்கு முன்னர் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் உச்சமாக இது இருந்தது. எனவே ஆப்கானிஸ்தான் மீது பாக். ராணுவத்தின் விமானப்படை அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாங்கள் தீவிரவாதிகளைதான் தாக்கினோம் என்று பாகிஸ்தான் கூற, நீங்கள் தாக்கியது அப்பாவி அகதிகளை என்று ஆப்கான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு என்ன லாபம்?: இந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஜெயித்தால் இந்தியாவுக்கு கணிசமான அளவில் பலன் இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். முதல் விஷயம் பாகிஸ்தான் பலவீனப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் என்பதுதான். ஏற்கெனவே பாகிஸ்தான் தற்போது பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டுதான் கிடக்கிறது. ஆனாலும் வாங்கிய அடி பத்தாமல் இந்தியாவுடன் தொடர்ந்து மொதல் போக்கை அது கடைபிடித்து வருகிறது. இப்படி இருக்கையில் ஆப்கானிஸ்தானின் அடி பலமாக இருந்தால் பாகிஸ்தான் கொஞ்ச காலத்திற்கு அடங்கி ஒடுங்கிதான் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் பகுதியில் பாகிஸ்தான் தலைமையில் நடக்கும் சதி செயல்களுக்கு ஒரு பெரிய பிரேக் கிடைக்கும். பாகிஸ்தானுக்கு நிலையான நாடு: ஆப்கானிஸ்தான் போரில் வெல்வதன் மூலம் ஒரு நிலையான அரசியல் கொண்ட நாடாக அது மாறும். இது பாகிஸ்தானுக்கு சரிசமான போட்டியை ஏற்படுத்தும். மட்டுமல்லாது ஆப்கானில் ஏற்கெனவே இந்தியா பல முதலீடுகளை செய்திருக்கிறது. போர் வெற்றி மூலம் மேலும் கூடுதலான முதலீடுகளை இந்தியா முன்னெடுக்கும். இது நமக்கு பொருளதார ரீதியில் உதவும். இப்படி அமையும் ஆப்கன்-இந்தியா கூட்டணி பாகிஸ்தானை மேலும் பலவீனப்படுத்தும். பொருளாதார பலம்: இந்தியாவுக்கு மத்திய கிழக்குடன் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் குறுக்கே இருப்பதால் இந்த வணிகத்திற்கு தடை ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் போரில் ஆப்கான் ஜெயித்தால், உறவை பலப்படுத்தி ஆப்கான் வழியாகவே மத்திய கிழக்கில் வர்த்தகத்தை நம்மால் மேற்கொள்ள முடியும். அப்படி மட்டும் நடந்தால், அரபு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டும். ஆனால் போர் சில சிக்கல்களையும் ஏற்படுத்தும். அகதிகள், புதிய தீவிரவாத குழுக்கள், சீனாவின் தலையீடு, பாகிஸ்தானுக்கு சீனாவின் ஆதரவு ஆகிய பிரச்சனைகளும் இருக்கின்றன. சீனாவின் தலையீடு: இந்த போரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் சீனா இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சீனாவுக்கு 'பெல்ட் அண்ட் ரோடு' எனும் வர்த்தக பாதை திட்டம் மிகவும் முக்கியமானதாகும். இந்த பாதை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாகத்தான் செல்கிறது. எனவே, இரு நாடுகளும் சண்டை போட்டுக்கொண்டால் வர்த்தக பாதை பாதிக்கும். ஆகவே, போரை தவிர்க்க சீனா சமாதானத்தை முன்னெடுக்கும். அல்லது பாகிஸ்தானுடன் தனக்கு இருக்கும் உறவை பலப்படுத்த, அந்நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் உளவு தகவல்களையும் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post