போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே ஹார்டின் விட்டாரே நினைவிருக்கா? நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டு சிறை!

post-img
நாகர்கோவில்: கந்துவட்டி வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றிய வழக்கில் ஏற்கெனவே காசிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (20). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை, பண மோசடி புகார் அளித்ததன் காரணமாக காசியை போலீஸார் கைது செய்தனர். அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் அவர் இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் நெருக்கமாக பழகி, அதை வீடியோவாக எடுத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனால் காசி மீது கோட்டார், வடச்சேரி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்து வட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. காசியின் செல்போனை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியில் பயன்படுத்திய வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. 400 ஆபாச வீடியோக்கள், 1900 நிர்வாணப் படங்கள் இருந்தது. இந்த நிலையில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காசிக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் காசி மேல்முறையீடு செய்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "மநுதாரர் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு எதிரான குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மையை கருதி மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள 6 வழக்குகளில் இரு வழக்குகளில் சிபசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த டிராவிட் என்பவர் வடச்சேரி காவல் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில் காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், இடைத்தரகர் நாராயணன் ஆகிய மூவரும் ரூ. 2 லட்சம் கடனுக்கு டிராவிடிடம் இருந்து கந்து வட்டி வசூலித்தது தெரியவந்தது. மேலு் மோட்டார் சைக்கிளை போலியான ஆவணங்களை தயாரித்து காசியின் பெயருக்கு மாற்றியும் உள்ளதும் தெரியவந்தது. இந்த கந்து வட்டி வழக்கு விசாரணை நாகர்கோவில் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் காசி, புரோக்கர் நாராயணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post