புத்தாண்டு 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ளது. புத்தாண்டில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளதால் 12 ராசிகளுக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடகம், விருச்சிகம், மீன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் கிடைக்கப் போகும் சாதகமான, பாதகமான பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்...
கடகம்: கடக ராசியைப் பொருத்தவரைக்கும் ராசிக்கு 12 ஆம் இடத்துக்கு குரு பகவான் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வரவுள்ளார். ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்த அஷ்டம சனி பகவான் மீன ராசிக்குப் போவதால் நீங்கள் விடுதலையாகப் போகிறீர்கள். கடன், நோய், வழக்கில் இருந்து யாவீர்கள். கல்வியில் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும். நல்ல மதிப்பெண்கள் எடுத்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் சிறந்த பதவி உயர்வு கிடைக்கும்.
சனி பகவான் உங்களுடைய ராசியை விட்டு சென்றாலும் ராகு பகவான் உள்ளே வருகிறார். ராகு பகவான் அவ்வளவு கஷ்டங்களை கொடுக்க மாட்டார். இருப்பினும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான சூழல் உருவாகும். யாரிடமாவது பணத்தைக் கொடுத்து ஏமாறும் வாய்ப்புள்ளது. சிறிய உடல்நல பாதிப்புகள் வந்தாலும் அதனை உடனடியாக பார்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த 7 முதல் 8 ஆண்டுளாகவே கடுமையான பிரச்னைகளைச் சந்தித்திருப்பார்கள். 2018 முதல் ஜென்ம கேது, அதற்கு முன்பு ஏழரைச் சனி, பின்னர் குரு அஷ்டமத்துக்குப் போனார். இப்போதும் குரு அஷ்டமத்துக்கு செல்கிறார். தொடர்ந்து அடியை மட்டுமே வாங்கிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். ஏப்ரல் வரை உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். மீண்டும் ஏப்ரலுக்குப் பிறகு குரு அஷ்டம குருவாக போகிறார். 5 ஆம் இடத்துக்கு பஞ்சம ஸ்தானத்துக்கு சனி செல்கிறார்.
ஆரோக்கிய ஸ்தானம் எனும் 4 ஆம் பாவத்துக்கு கேது வருகிறார். லாபஸ்தானத்தில் இருக்கும் கேது கர்ம ஸ்தானத்துக்குப் போவதால் தொழில் பாதிப்படையும். திருமணமாகதவர்கள் ஏப்ரல் மாதத்துக்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது. விவாகரத்தானவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். வருமானப் பற்றாக்குறை இருக்காது. ஆனால் மன நிம்மதி இருக்காது. சினிமா துறையில் இருப்பவர்களுக்கு புகழ் உண்டாகும். உடல்நல பாதிப்புகள் உண்டாகும். உள்ளூரிலேயே இருந்தால் பெரிய முன்னேற்றம் இருக்காது. செயற்கையாக குழந்தை பாக்கியம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
மீனம்: ராசியில் இருந்து ராகு பகவான் விலகுவது நல்லது. ஆனால் ராசிக்கு சனி வருவது கெட்ட பலன்களைத் தரும். பெற்றோருக்கு பிரச்னைகள் உண்டாகும். இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அம்மாவுக்கு பாதிப்பை உண்டாக்கும். அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் வரும். 3 ஆம் இடத்தில் இருக்கும் குரு 4 ஆம் இடத்துக்குச்செல்வதால் திருமண வரன்கள் கைகூடி வரும். சொந்த ஊரில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.
கார் மற்றும் சொத்துகளை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். மீன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும். அதற்குப் பிறகு 5 வருடங்களுக்கான ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. ஆனால் பெரிய பாதிப்பை உண்டாக்காது. குருவும் சனியும் அடுத்தடுத்த அமைப்பு கொண்டதால் கெடுபலன்கள் ஏற்படாது. குருவின் வீடான மீனத்தில் உத்திரட்டாதி, சனி நட்சத்திரம் இருப்பதாலும், சனியின் வீடான கும்பத்தில் பூரட்டாதி இருப்பதால் கெடு பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.