என்னருமைத் தங்கைகள், சகோதரிகள்.. ஒரே நாளில் பாசத்தை அள்ளிப் பொழிந்த விஜய், உதயநிதி, அண்ணாமலை

post-img
சென்னை: தமிழ்நாட்டு பெண்கள் மீது இன்று ஒரே நாளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாசமழை பொழிந்து, "என்னருமைத் தங்கைகள், சகோதரிகள்" என உருகி அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைப்பட எழுதி வெளியிட்ட அறிக்கை: அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அரசுப்பள்ளிகள் மட்டுமன்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியரும், மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுகிற வகையில், புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து, மாண்புமிகு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். ஏற்கனவே, மாதந்தோறும் 2.98 லட்சம் மாணவியர் இத்திட்டத்தால் பயன்பெற்று வரும் நிலையில், இனி கூடுதலாக 75 ஆயிரம் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறவுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதமே சாட்சி. சமூகத்தில் சரி பாதி இருக்கும் பெண்களின் கல்விக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் மூலம், பயன்பெறுகின்ற அத்தனை தங்கைகளுக்கும் என் அன்பும், வாழ்த்தும்! இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் பதிவு: தமிழக சகோதரிகள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாமலும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து, கண்களைக் கட்டிக் கொண்டு போராடும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழக பாஜக மகளிர் அணி சகோதரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post