புதாதித்ய ராஜயோகத்தால் கொட்டும் பணம்.. 3 ராசிகளுக்கு அடிச்சது அதிர்ஷ்டம்

post-img
புதாதித்ய யோகம்: 2025 புத்தாண்டு அமோகமாகத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் புதன் பகவான் தனுசு ராசியிலும், சூரிய பகவான் மகர ராசியிலும் நுழைகிறார். இதனால், புதாதித்ய யோகம் உருவாவதால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. ஒன்பது கிரகங்களில் இளவரசனாகத் திகழும் பகவான் புதன். மனஉறுதி, நம்பிக்கை, கல்வி, தொழில், பேச்சு உள்ளிட்டவற்றுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறார். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தனது இடத்தை மாற்றக் கூடிய கிரகமாக புதன் உள்ளது. புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாகத் திகழ்பவர் புதன் பகவான். 2025 புத்தாண்டில் புதன் பகவான் தனுசு ராசியிலும், சூரிய பகவான் மகர ராசியிலும் நுழைகின்றனர். புதன் மற்றும் சூரியனின் இந்த இடமாற்றத்தால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த புதாதித்ய யோகத்தால் அனைத்து ராசிகளும் தாக்கத்தை அனுபவித்தாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. அந்த மூன்று ராசிகள் எவை என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்... மேஷம்: புதாதித்ய ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். அதிக சம்பளத்துடன் கூடிய வேலை நீங்கள் எதிர்பார்த்தது போலவே அமையும். நிதிநிலைமையில் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் அனைத்தும் குறையும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். பண வரவு அமோகமாக இருக்கும். நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். நண்பர்களின் ஆதரவு பெருகும். மிதுனம்: இந்த ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கப் போகின்றது. அலுவலகத்தில் உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதற்கான சிறந்த சூழ்நிலைகள் அமையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலையாவீர்கள். பணம், வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவற்கான யோகங்கள் உண்டாகும். உங்களுடைய பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் உங்களை வந்து சேரும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் பனிபோல் விலகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு பெருகும். உறவுகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் நல்ல பலன்களைத் தரப் போகிறது. பணவரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் இருக்கும். சூரியன் மற்றும் புதனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து நிதி சிக்கல்களும் தீரும். நீங்கள் செய்து வந்த முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். நீண்டகாலமாக வேலை இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். நீண்டகாலமாக ஏற்பட்டு வந்த நிதி பிரச்னைகள் அனைத்தும் தீரும். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை, தைரியம் பிறக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post