ரஷ்யாவில் புதினுக்கே தெரியாமல்.. சிரியா மாஜி அதிபரை விஷம் வைத்து கொல்ல முயற்சி? என்ன நடந்தது?

post-img
மாஸ்கோ: சிரியா உள்நாட்டு போரால் உயிருக்கு பயந்து அதன் அதிபர் பஷர் அல் அசாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். பஷர் அல் அசாத் தனது நண்பர் என்பதால் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அவருக்கு அடைக்கலம் வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் பஷர் அல் அசாத்தை ரஷ்யாவில் வைத்து கொல்ல முயற்சி நடந்துள்ளதும், அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. குறிப்பாக சிரியா அதிபராக இருந்த பஷர் அல் அசாத் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நல்ல நண்பர்களாக உள்ளனர். பஷர் அல் அசாத்துக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறேதா அப்போதெல்லாம் விளாடிமிர் புதின் தேவையான ராணுவ உதவிகளை வழங்கி வந்தார். பஷர் அல் அஷாத் தனது தந்தையை தொடர்ந்து சிரியா நாட்டின் அதிபராக கடந்த 2000ம் ஆண்டில் பதவியேற்றார். இவருக்கு எதிராக உள்நாட்டு போர் என்பது தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. அப்போது சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை ரஷ்யா மற்றும் ஈரான் படைகள் தான் காப்பாற்றின. இதையடுத்து பஷர் அல் அசாத் ஆட்சியை தக்கவைத்து கொண்டார். அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமாகி உள்ளது. அந்த நாட்டின் அதிபராக உள்ள பஷர் அல் அசாத்துக்கு எதிராக அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கி முக்கியமான இடங்களை கைப்பற்றின. இதையடுத்து கடந்த 8 ம் தேதி சிரியா அதிபர் பஷர் அல் அஷாத் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமானத்தில் வெளிநாடு தப்பினார். அவர் தனது நண்பரான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உதவியுடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். தற்போது அவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ரகசியமான இடத்தில் அப்பார்ட்மென்ட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பஷர் அல் அஷாத்தை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக generalsvr-en என்ற எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தை ரஷ்யாவின் உளவுப்பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி கையாண்டு வருவதாக கூறப்படுவதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது அந்த பக்கத்தில், ‛‛கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பஷர் அல் அசாத்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உடனடியாக தனது பாதுகாவலர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவி கோரியுள்ளார். மருத்துவ குழு வருவதற்குள் அவருக்கு வறட்டு இருமல் ஏற்பட்டுள்ளது அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூச்சுவிடும் பிரச்சனையில் இருந்து மெல்ல மீள தொடங்கி உள்ளார். ஆனாலும் வயிற்று வலி மற்றும் தலைவலியை அவர் எதிர்கொண்டுள்ளார். மருத்துவ குழு வந்து சோதனை செய்தபோது அவரது உடல்நலம் மோசமாகி உள்ளது. இதையடுத்து பஷர் அல் அஷாத்தின் அப்பார்ட்மென்ட்டில் மருத்துவ அறை அமைக்கப்பட்டு அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நன்றாக உள்ளார். ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது உடலில் விஷம் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் உதவியாளர் நிகோலாய் பத்ருஷவ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் பஷர் அல் அசாத் உடலில் விஷம் சென்றது என்பது புரியாத புதிராக உள்ளது'' என்று கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post