புத்தாண்டு பலன் 2025: வீடு, சொத்து, பதவி உயர்வு பெறும் மிதுன ராசி.. யோகத்தை அள்ளிக் கொடுக்கும் குரு

post-img
புத்தாண்டு 2025: புத்தாண்டு பல புதுமைகளுடன் பிறக்கப் போகிறது. மிதுன ராசிக்காரர்கள் வரும் புத்தாண்டில் என்ன விதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for midhunam) அடுத்தவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் உடனடியாக ஓடோடிப் போய் உதவக் கூடியவர்கள் மிதுன ராசிக்காரர்கள். அடுத்தவர்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு மற்றும் தீர்ப்பு சொல்லும் நீங்கள் உங்களுக்கு ஓர் பிரச்னை என்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். என்ன ஆகிவிடப் போகிறது என்று கொஞ்சம் பொறுமையாக இருப்பீர்கள். அந்தப் பொறுமைதான் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகிறது. இவற்றை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் இன்னும் கூடுதலாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 2024 ஆம் ஆண்டு பல வேலைகள் அரைகுறையாக நின்றிருக்கும். இதோ நடந்துவிடும், இப்போது நடந்துவிடும் என்று நினைத்து பார்த்து எதுவும் நடக்கவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். ஆனால், 2025 இல் முழுமையாக முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். ராசிக்கு ஏழாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் இருந்த வந்த பிரிவுகள் எல்லாம் சரியாகி ஒற்றுமை அதிகரிக்கும். செலவாகிக் கொண்டே இருந்து வந்த நிலையில், இனி பணவரவு உண்டாகும். சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து பத்தாவது வீட்டில் வந்து உட்காருவதால் தொழில் தொடங்குவது, வேறு வேலைக்கு மாறுவது, புதிய வேலை கிடைப்பது, சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல, ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். மே 18 ஆம் தேதி முதல் ராகு கேது மாறுகிறார். அதனால் கேது நான்காம் இடத்தில் உட்கார்ந்து உங்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார். சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. எப்போது பார்த்தாலும் எதவாதொரு சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. அட்வாண்ஸ் கொடுத்து, அக்ரிமென்ட் போட்டாலும் அந்த இடத்தை, வீட்டை வாங்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த ஆண்டு வருத்தமெல்லாம் நீங்கும். இனிமேல் அட்வாண்ஸ் கொடுத்து, அக்ரிமென்ட் போடுவீர்கள். சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் அமையும். மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி மாறுவதால் நல்ல பலன்கள் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் ராசிக்குள் மே 14 ஆம் தேதி குரு பகவான் உங்கள் ராசிக்குள் வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். நொறுக்கு தீனிகளை குறைப்பது நல்லது. உணவுக் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்குள் சிறிய சிறிய விவாதங்கள் வரும். அனுசரித்துச் செல்வது நல்லது. 2025 உங்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும். உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகள் வெளியில் வரும். எடுத்த விஷயங்களில் வெற்றியைக் காண்பீர்கள். 2025 இல் முன்னேற்றத்தைக் காண காஞ்சி காமாட்சியம்மனை தரிசிப்பது நல்லது. பச்சை பயிறு தானமாக கொடுக்கலாம். ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post