வட தமிழகம் சைஸ் கொண்ட நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சீனா! லடாக்கில் வெடிக்கும் புதிய பிரச்சனை

post-img
டெல்லி: ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்டவற்றில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இப்போது வடகிழக்கு லடாக்கில், வட தமிழகம் அளவிலான பெரிய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சீனா செய்த ஆக்கிரமிப்பு, கால்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் அத்துமீறல் உள்ளிட்டவை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சிக்கலை அதிகரித்திருக்கிறது. எல்லை பகிர்வு, மறுவரையறை உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ள இரு நாடுகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதை கெடுக்கும் நோக்கத்தில் சீனா மீண்டும் சலசலப்புகளை கிளப்பி வருகிறது. என்ன பிரச்சனை: வடகிழக்கு லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ பரப்பளவிலான நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாகும். இந்திய வரைப்படத்தில் இந்த பகுதி 'அக்சாய் சின்' என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் சீனாவோ, இதனை He'an County மற்றும் Hekang County என குறிப்பிட்டு, இரண்டு புதிய மாவட்டங்களாக அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களும் சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வட தமிழகம் சைஸ்: சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் வரை உள்ள இடங்களை சேர்த்தால்தான் ஏறத்தாழ 38,000 சதுர கி.மீ பரப்பளவு வரும் இவ்வளவு பெரிய நிலப்பகுதியை சீனா முறைக்கேடான முறையில் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து இந்தியா சர்வதேச அளவில் பிரச்னையை எழுப்ப இருக்கிறது. ஏனெனில் கடந்த முறை சீனாவுடனான உறவு குறித்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. எல்லை பிரச்சனை: ஏற்கெனவே உள்ள எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கு இரு நாட்டின் தலைவர்கள், அதாவது மத்திய அரசு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் கடந்த டிச.18ம் தேதி சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பேச்சுவார்த்தை இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை நடந்து 2 வாரங்களுக்குள் சீனா இன்னொரு பஞ்சாயத்தை கிளப்பியிருப்பது, எல்லை பிரச்சனைக்கு சீனா தீர்வு காண முன்வரவில்லையோ? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இன்று நேற்று பிரச்சனையல்ல: எல்லை தொடர்பாக பேசி தீர்த்துக்கொள்வது என கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. அதனால்தான் இரு நாட்டு எல்லை பகுதிகளில் வீரர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஆயுதம் இல்லாமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1996ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கை உடன்படிக்கை (CBMs) கையெழுத்தானது. அதில் LAC பகுதியில் இரு வீரர்களும் ஆயுதங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த உன்படிக்கை, 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலில், இந்திய ராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. எது எப்படியோ, இப்போது மீண்டும் சீனாவின் ஆதிக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது நமது உடனடி கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post