வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்.. தாமதமான ஐடிஆர் தாக்கல் செய்வதெப்படி?

post-img
சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய இன்று அதாவது டிசம்பர் 31ம் தேதியான நாளை கடைசி நாள் ஆகும். , வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்? தாமதமான வருமான வரி தாக்கலை செய்வது எப்படி தெரியுமா? கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமானோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர். பங்களிப்பு: 2024-25 நிதியாண்டில் வருமான வரி கணக்கை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வரை 10 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 847 பேர் தாக்கல் செய்திருக்கிறார்கள்.. இதன்மூலம் ரூ.19 லட்சத்து 61 ஆயிரத்து 823 கோடி வரி வசூலாகி உள்ளது. தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 67 கோடி என்று தகவல் வெளியாகியிருந்தது. எனினும், இந்த காலகட்டத்துக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி அபராத்துடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இன்று டிசம்பர் 31 காலக்கெடுவை தவறவிட்டால் என்னாகும் தெரியுமா? இன்று ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான டிசம்பர் 31 காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், உங்கள் அபராதத் தொகை ரூ.10,000 ஆக அதிகரிக்கும். ஒருவேளை, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால். சட்ட நடவடிக்கை மற்றும் நிதி இழப்பையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். குற்ற வழக்கு: அதுமட்டுமல்ல, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்பது குறித்து ஆடிட்டர் ஒருவர் சொல்லும்போது, "இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய விரும்புபவர்கள் இன்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுவது நல்லது. இல்லாவிட்டடால் எதிர்காலத்தில் கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படும். பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டு பயணம் போன்றவற்றிலும் தடைகள் ஏற்படலாம். குற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும்" என்றார். - வருமான வரித்துறையின் e-filing வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். இதற்கு உள்நுழைய அல்லது பதிவு செய்ய உங்கள் பான் எண்ணை பயனர் ஐடியாக பயன்படுத்தவும். - வருமானத்திற்கு ஏற்ப ITR படிவத்தை தேர்ந்தெடுத்து, 2023-24 நிதியாண்டிற்கான 2024-25 என்ற மதிப்பீட்டு வருடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். . - இப்போது உங்களது வருமானம், வருமான வரி விலக்கு, வரிப்பொறுப்பு பற்றிய விவரங்களை நிரப்ப வேண்டும் - பிறகு வட்டி மற்றும் அபராதம் உட்பட ஏதாவது நிலுவையிலுள்ள வரியை செலுத்த வேண்டும் - ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது நேரடி சரிபார்ப்பு மூலம் வெரிஃபை செய்த பிறகு, வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post