கடந்த காலத்திற்கு டைம் டிராவல்! 2025 ஜனவரி 1 பயணித்து.. 2024 டிசம்பர் 31ல் இறங்கிய விமானம்! எப்படி?

post-img
சென்னை: இன்று உலகம் முழுக்க பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விமானம் ஒன்று கடந்த காலத்திற்கு பயணம் செய்த விஷயம் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இது ஒன்றும் கதைக்காக எழுதப்பட்ட விஷயம் அல்ல.. ஹாலிவுட் படத்தின் கதை அல்ல.. tenet 2 அல்லது மாநாடு 2 படத்தின் கதை அல்ல.. நிஜத்தில் நடந்த கதை! சரி அந்த டைம் டிராவல் பற்றி பார்க்கும் முன்.. சில விளக்கங்களை உதாரணங்களை பார்த்துக்கொள்ளலாம். டைம் டிராவல் என்பது நாம் வகுத்துள்ள நேரப்படி தினமும் நடக்கின்ற இயல்பான ஒன்றுதான். ஆனால் இது நீங்கள் சைன்ஸ் பிக்சன் படங்களில் பார்ப்பது போல எதிர்காலத்திற்கு, கடந்த காலத்திற்கு செல்லும் பயணம் அல்ல. ஒரு சில மணி நேரங்களுக்கு முன்கூட்டியே செல்ல கூடிய பயணம்தான் இது. உதாரணமாக இப்போது டெல்லியில் இருக்கிறீர்கள் நீங்கள். டெல்லி நேரத்திற்கும் பெர்லின் நேரத்திற்கும் 4.30 மணி நேரம் வித்தியாசம். அதாவது இப்போது பெர்லினில் டைம் காலை 9.30 மணிதான். அதாவது அவர்கள் நம்மை பொறுத்தவரை கடந்த காலத்தில்தான் இருக்கிறார்கள். உதாரணமாக இப்போது நீங்கள் தனி விமானம் ஒன்றில் பயணம் செய்கிறீர்கள். இது எங்கேயும் நிற்காத விமானம் என்று வைத்துக்கொள்வோம். போர் விமானம் போல வேகமாக செல்லும் என்று வைத்துக்கொள்வோம். இப்போது 2 மணிக்கு நீங்கள் கிளம்பினால் அங்கே 5 மணிக்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் 4.30 மணி நேரம் நேர வித்தியாசம் உள்ளது. இதனால் நீங்கள் பெர்லினுக்கு 12.30 மணிக்கு சென்றுவிடுவீர்கள். அதாவது நீங்கள் 2 மணிக்கு டெல்லியில் தொடங்கி.. 12.30 மணிக்கு.. கடந்த காலத்திற்கு பயணம் செய்து பெர்லினுக்கு சென்று விடுவீர்கள். அதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பின்னோக்கி சென்றுள்ளீர்கள். சரி இப்போது உதாரணம் போதும்.. நிஜ எடுத்துக்காட்டை பார்க்கலாம். இன்று அதிகாலை ஹாங்காங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு ஒரு விமானம் சென்றுள்ளது. இன்று 2024 ஜனவரி அதிகாலை 12.30 மணிக்கு.. அதாவது நியூ இயர் தொடங்கி 30 நிமிடம் கழித்து அந்த விமானம் ஹாக்கிங்கில் தொடங்கி உள்ளது. இந்த விமானம் நேரப்படி பின்னோக்கி பயணம் செய்து லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு சென்றுள்ளது. இதற்கு காரணம் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு. லாஸ் ஏஞ்சல்ஸில் இப்போதுதான் புத்தாண்டு தொடங்கி உள்ளது. அங்கே டைம் இப்போது ஜனவரி 1 அதிகாலை 12.50. அதே நேரத்தில் ஹாங்காங்கில் நேரம் ஜனவரி 1 மாலை 4.30 மணி (செய்தி எழுதும் நேரத்தில்). இரண்டு பகுதிகளுக்கும் இடையில் இவ்வளவு நேர வேறுபாடு உள்ளது. இதன் காரணமாகவே அந்த விமானம் ஒரு காலத்தில் பயணம் செய்ய தொடங்கி அதற்கு முந்தைய காலத்திற்குஸ் என்றுள்ளது. அதாவது 2025ல் தொடங்கி 2024க்கு சென்று உள்ளது. இதன் மூலம் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் ஹாங்காங்கில் 30 நிமிடம் புத்தாண்டு கொண்டாடிவிட்டு.. லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று மீண்டும் புத்தாண்டு கொண்டாடி உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post