வெடிக்கும் பெரிய போர்? இஸ்ரேலை வார்னிங் செய்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. என்ன நடக்க போகுதோ?

post-img
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் போக்கு உள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி கொண்டன. இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முழுவீச்சில் தயாராக இருப்பதாக அந்த நாட்டுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வார்னிங் செய்துள்ளது பெரிய போர் உருவாகிறதா? என்ற கேள்வியை எழுந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்லாமிய நாடுகள் அதிகம் உள்ளன. அங்கு உள்ள ஒரேயொரு யூத நாடு என்பது இஸ்ரேல். இந்த இஸ்ரேலுக்கும், பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மீது போரை தொடங்கியது. இந்த போர் ஓராண்டை கடந்து நடந்து வருகிறது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவில் செயல்படும் அமைப்பாகும். இதையடுத்து ஈரான் இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. அதன்படி இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருந்து ஹெஸ்புல்லா அமைப்பின் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது. இதனை இஸ்ரேல் சமாளித்து ஹெஸ்புல்லா தலைவர், தளபதிகளை கொன்று குவித்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஈரான் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இஸ்ரேல் மீது வான்வெளியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு 26 நாட்கள் கழித்து அக்டோபர் 27ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 5வது ஜெனரேஷன் எப்-35 அதிர் பைட்டர் ஜெட்கள், எப் 15I ரா'ம் கிரவுண்ட் அட்டாக் ஜெட்கள், எப் -16I சுபா ரே் டிபென்ஸ் ஜெட்ஸ் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தின. இந்த போர் விமானங்கள் மூலம் ராம்பேஜ் லாங்க் ரேஞ்ச், சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் ‛ராக்ஸ்' நெக்ஸ்ட் ஜெனரேஷன் உள்ளிட்ட ஏவுகணைகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இப்படியா இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்ரேலுக்கு கடும் வார்னிங்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீனாவை சேர்ந்த மீடியாவுக்கு அப்பாஸ் அராக்சி கூறியதாவது: இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனியும் இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும். அந்த தாக்குதல் என்பது பிராந்திய அளவில் பெரிய போருக்கு அழைத்து செல்லலாம். இதனால் இஸ்ரேல் இந்த தவறான நடவடிக்கையை செய்யாது என்று நம்புகிறேன். இஸ்ரேல் தவறு எதையும் செய்யாது என்று நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த பேட்டி என்பது இஸ்ரேலுக்கான வார்னிங்காக பார்க்கப்படுகிறது. இனியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். பதிலடி கொடுப்போம். இந்த பதிலடி என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய போரை ஏற்படுத்தலாம் என்பதை தான் அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த வார்னிங்கின் பின்னணியில் முக்கியமான 2 விஷயங்கள் உள்ளன. இதில் ஒன்று இஸ்ரேல் சம்பந்தப்பட்டது. இன்னொன்று அமெரிக்காவுடன் தொடர்புடையது. அதாவது இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனத்தின் காசா மீது போர் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா அமைப்பு மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. காசாவில் ஹமாஸ் படை தளபதி, லெபனானில் ஹெஸ்புல்லா படை தளபதியை இஸ்ரேல் ஏற்கனவே கொன்றுவிட்டது. இரு அமைப்புகளும் தலைமை இன்றி தவிக்கும் சூழலில் ஈரானை குறிவைத்துள்ளது இஸ்ரேல். ஈரான், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபரில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது ஈரான் அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டிவரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு விதமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போது ஜோ பைடன் பதவி காலம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஜனவரி 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். டொனால்ட் டிரம்பை பொறுத்தமட்டில் ஜோ பைடனை விட ஈரான் எதிர்ப்பில் கடுமையாக உள்ளார். அதேபோல் இஸ்ரேல் மீதும் ஜோ பைடன் போல் டிரம்ப் கரிசன பார்வையை வைத்துள்ளார். இதனால் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்த பிறகு இஸ்ரேலுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செயல்படலாம் என்றும் ஈரான் நினைக்கிறது. இதனால் தான் முன்கூட்டியே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வார்னிங் மெசேஜை அனுப்பி உள்ளதாக சர்வதேச அரசியல் வியூகர்கள் தெரிவிக்கின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post