ஃபெஞ்சல் புயல்.. தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு

post-img
சென்னை: ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழிலில் வெளியிடபட்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயவில்லை. ஜனவரி மாதத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை. எனினும் நவம்பர் மற்றும் டிசம்பரில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கடந்த நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயல் வங்க கடலில் உருவானது. இந்த புயல் எதிர்பார்த்ததை விட மெதுவாக கரையைக் கடந்தது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் கரையைக் கடந்த போது பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால், இரண்டு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. இந்த புயல் மற்றும் வெள்ளத்தால் இரண்டு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை தீவிர பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீவிர இயற்கை பேரிடராக அறிவித்ததன் மூலம், மாநிலத்திற்கு உட்பட்ட பேரிடர் நிதி மட்டுமின்றி இதர நிதிகளையும் பேரிடர் கால சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது. விழுப்புரம்,கடலூரில் கோர பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலால், பெரும் சேதம் ஏற்பட்டது. விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஃபெஞ்சல் புயலால் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசு ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு வேண்டிய நிதியை விடுவிக்குமாறு தமிழக அரசு கோரியது. எனினும் இதற்கு சாதகமான பதில் வராத நிலையே உள்ளது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர பேரிடராக தமிழக அரசு இன்று அறிவித்து இருக்கிறது. தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துரை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டும் இன்றி பிற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த முடியும். ஃபெஞ்சல் புயல் பாதிப்பினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக அறிவித்தது. இந்த நிலையில், தான் தற்போது தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது தமிழக அரசு. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post