போபால் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து.. 337 மெட்ரிக் டன் விஷ கழிவுகள் அகற்றம்!

post-img
டெல்லி: 15,000 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த போபாலின் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு 337 மெட்ரிக் டன் விஷ கழிவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த 1984ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆலையில் இருந்த நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. கழிவுகளை வெளியேற்றுவது குறித்த வழக்கில், பலமுறை நீதிமன்றம் கழிவுகளை வெளியேற்ற அறிவுறுத்தியிருந்தது. ஆனால் மாநில அரசின் மெத்தன போக்கு காரணமாக கழிவுகள் வெளியேற்றப்படாமல் இருந்தன. இதனையடுத்து 4 வாரங்கள் அவகாசம் கொடுப்பதாக நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து கடந்த 31ம் தேதி கழிவுகளை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த பணி இன்று நிறைவடைந்துள்ளது. பாதுகாப்பாக சீலிடப்பட்ட டிரக்குகள் மூலம் கழிவுகள் 230 கி.மீ தொலைவில் உள்ள பீதம்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இந்த கழிவுகள் அங்கு வைத்து எரிக்கப்படும். முதலில் சிறிய அளவிலான கழிவுகள் எரிக்கப்பட்டு, அதில் மாசு ஏற்படுகிறதா? என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆம் எனில், கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக எரிக்கப்படும். முழுமையாக எரிக்க 9 மாதங்கள் வரை ஆகலாம். எரிக்கும் போது 4 வகையான புகை வடிக்கட்டிகள் பயன்படுத்தப்படும். இதில் தேங்கும் சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்படும். ஒருவேளை சாம்பலில் நச்சு இல்லையெனில் 3 மாதங்களில் அனைத்து கழிவுகளும் எரிக்கப்படும். கழிவுகளை எரிக்கும் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 1984ம் ஆண்டு இந்த ஆலையிலிருந்து மெத்தில் ஐசோசயனேட் எனும் நச்சு வாயு வெளியேறியிருந்தது. இதை சுவாக்கும்போது மூச்சு திணறல்தான் முதலில் ஏற்படும். இப்படித்தான் போபாலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மட்டுமல்லாது இந்த வாயு, நாள்பட்ட நுரையீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post