நைட் கிளப் டான்சர் அட்டகாசம்.. கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க சொல்லி.. சென்னை வடபழனியில் பரபரப்பு

post-img
சென்னை: பெண் ஒருவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, வடபழனி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது? சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நள்ளிரவு 1 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையிலேயே வந்தார்.. அங்கிருந்த பெண் போலீஸிடம் "என்னுடைய ஆண் நண்பர், என்னுடன் நெருங்கி பழகிவிட்டு, இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். நள்ளிரவு 1 மணி என்பதால், ஸ்டேஷனில் இருந்த போலீசார், ரோந்து பணிக்கு சென்றுவிட்டனர். அதனால் பாராவில் பெண் போலீஸ் ஆர்த்தி மட்டும் இருந்துள்ளார். எனவே, காலையில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறார் ஆர்த்தி.. மதுபோதை: ஆனால் மதுபோதையில் இருந்த பெண், தன்னுடைய டூவீலரில் தயாராக பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றிக்கொண்டார்.. தனக்கு இப்போதே நியாயம் வேண்டும், என்னுடைய ஆண் நண்பரை உடனே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று சொல்லி நெருப்பை வைத்துக் கொள்ள முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் போலீஸ் ஆர்த்தி, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் பெண் உடலில் தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டார். பிறகு சம்பவம் குறித்து , டியூட்டியிலிருந்த எம்ஜிஆர் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்முக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அம்மு, தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார். நைட் கிளப்: அப்போதுதான் அந்த பெண் வடபழனி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே திருமணமாகி கணவருடன் வசித்து வருவதும் தெரியவந்தது. டான்சராக உள்ள இந்த பெண், நைட் கிளப் ஒன்றில் தற்சமயம் நடனமாடி வருகிறாராம். தன்னுடைய வீட்டு பக்கத்திலேயே வசிக்கும் அறிவழகன் என்ற 34 வயது நபருடன் ஆர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிவழகன் கேட்டரிங் பணி செய்து வருகிறாராம். அவருக்கும் திருமணமாகிவிட்டது. மனைவியுடன் வசித்து வருகிறார்... பரபரப்பு: எனினும், இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி, கள்ளத்தொடர்பிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். டான்சரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அறிவழகன் அடிக்கடி சொல்லி வந்துள்ளார். பிறகு திடீரென திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதனாலேயே இப்படி போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துள்ளது தெரியவந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post