அதிராம்பட்டினத்தில் வலையில் சிக்கும் கத்தாழை மீன்.. தஞ்சாவூரே குஷியாயிடும்! கூறை கத்தாழையின் அதிசயம்

post-img
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அவ்வப்போது கிடைக்கும் அரிய வகை மீன்கள்தான் கத்தாழை மீன்கள்.. இந்த மீன்கள் தங்கள் வலைகளில் சிக்கிவிட்டாலே, மீனவர்களுக்கு குஷியாகிவிடுமாம். அப்படி என்ன சிறப்புகள் இந்த மீனில் உள்ளன? திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொகுதி கடல் சார்ந்த பகுதி என்பதால், நிறைய மீன்கள் இந்த பகுதியில் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், அலையாத்திகாடுகளும் இங்கு இருக்கும். ஸ்பெஷல் மீன்: இதன் வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் மிகவும் சத்து நிறைந்ததாகவும், ருசி நிறைந்ததாகவும் இருக்கும்.. கொடுவா கெண்டை, வெள்ளாம்பொடி போன்ற மீன்கள் கிடைத்தாலும், இதில் கத்தாழை மீன்கள் மிகவும் விசேஷமானது. கூரை கத்தாழை என்பது அரியவகை மீன்களில் ஒன்றாக இருக்கிறது.. கிட்டத்தட்ட அதிராம்பட்டினம் 25 கிலோ எடை கொண்டதாககூட இந்த மீன்கள் இருக்கும். இது ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தது. கூரைக் கத்தாழை மீனின் சிறப்பம்சம் என்னவென்றால், இதிலுள்ள நெட்டி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆண்மை குறைவு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தக் கூடியது.. மேலும் விலை உயர்ந்த ஒயின் தயாரிக்க கத்தாழை மீன்களை அதிகம் பயன்படுத்துவார்களாம். இதனால் வெளிநாட்டிலும் இந்த மீன்களுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம். கால்சியம் சத்து: எலும்பு தேய்மானம், சொறி சிரங்கு, நோய் எதிர்ப்பு தன்மை குறைவால் ஏற்படும் நோய்களை இந்த கத்தாழை மீன்கள் குறைக்கின்றன. இதயநோய் மற்றும் பக்கவாதம் நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்க செய்கிறது. கால்சியம் எலும்பையும், பாஸ்பரஸ் பற்களை பாதுகாக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் தன்மை மற்றும் கொழுப்புகள் இல்லாமல் முற்றிலும் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் இதய தமனிகளை பாதுகாத்து உடல் எடை அதிகரிக்காமல் சீராக வைத்திருக்க இந்த கத்தாழை மீன்கள் தூண்டுகோலாக உள்ளன. மீன்களில் இருக்க கூடிய ஒமேகா 3 ஊட்டச்சத்து, இந்த கத்தாழை மீன்களில் சற்று அதிகமாகவே உள்ளதாம். அதனால்தான், இந்த மீன் எப்போது மார்க்கெட்டுக்கு வந்தாலும், அதன் விலையை பார்க்காமல், உடனே மீன்பிரியர்கள் வாங்கிவிடுவார்களாம். கத்தாழை மீன்கள்: அதிலும், கத்தாழை மீன்களில் ஆண் கத்தாழை மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுமாம்.. காரணம், ஆண் கத்தாழை மீன்களின் வயிற்றிலுள்ள நெட்டி மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த நெட்டிக்காகவே இந்த மீன்கள் அதிக விலை போகும் என்கிறார்கள். இந்த வகை ஆண் மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றிலுள்ள நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். பெண் மீன்களுக்கு சிறிய அளவிலான நெட்டி இருக்குமாம். இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகையான ஒலியை எழுப்பும் தன்மை கொண்டது. மேலும் இந்த நெட்டி, ஐசிங்கிளாஸ் என்ற பளபளக்கும் ஒரு வகை வேதிப்பொருட்களை கொண்டது. இவைகளைதான், ஒயின், ஜெல்லி மிட்டாய், மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள். நெட்டி காஸ்ட்லி: இதனால் மீனவர்கள் இதை சேமித்து கிராம் கணக்கில் விற்பனை செய்வார்களாம். அதாவது, ஒரு மீனில் குறைந்தபட்சம் 100 கிராம் வரை நெட்டி கிடைக்கும் என்கிறார்கள் மீனவர்கள். ஆனால், இந்த வகை மீன்கள் எளிதில் கிடைக்காது. ஆழ்கடலில் 4 அல்லது 6 நாட்கள் தங்கியிருந்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் பிடிக்க வேண்டுமாம். பெரும்பாலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு கத்தாழை மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.. அதாவது ஆழ்கடலில் ஆபத்தான நிலையில்தான் இந்த மீன்களை பிடிக்க முடியும். அப்படியே ரிஸ்க் எடுத்து பிடித்தாலும், வலையில் மாட்டுவது அரிதான விஷயம் என்கிறார்கள். கத்தாழை மீன்கள்: இந்த மீன் பற்றியான சிறப்புகளை பலருக்கும் தெரியும் என்பதால், கத்தாழை மீன்களை போட்டி போட்டு ஏலம் கேட்பது வழக்கமாகும்.. அத்துடன் மீனவர்கள் வலையில் அரிதாகவே மாட்டக்கூடியது என்பதால்தான் இந்த விலைக்கு ஏலம் எப்போதுமே அதிகமாக போகும் என்கிறார்கள் மீனவர்கள். சமீபத்தில், அதிராம்பட்டினம் பகுதி கரையூர் தெரிவை சேர்ந்த மீனவர் ரவி என்பவர் வலையில் இந்த கூறல் கத்தாழை மீன் சிக்கிவிட்டது.. இறுதியில் இந்த மீன் ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் போனது. மீன் ஒன்று ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன செய்தி அப்பகுதியில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தெரியவர இது பேசும் பொருளாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post