"என் மகனை கொன்னுட்டாங்க.." ஓபன் ஏஐ ஊழியரின் இந்திய தாய் பரபர! திடீரென உள்ளே வந்த மஸ்க்! என்னாச்சு

post-img
வாஷிங்டன்: சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்த சுசீர் பாலாஜி கடந்த மாதம் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்றும் இது தொடர்பாக எஃப்.பி.ஐ விசாரணை வேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கூட பாலாஜியின் மரணம் தற்கொலையாக இருக்காது எனக் கூறியுள்ளது பகீர் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் இப்போது கணிசமான அளவுக்கு இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாகத் தொழில்நுட்பம், ஐடி, ஏஐ உள்ளிட்ட துறைகளில் தான் இந்தியர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள். சுசீர் பாலாஜி: அப்படி அமெரிக்காவில் வேலை செய்து வந்த இந்தியர் சுசீர் பாலாஜி.. இவர் சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விசில்ப்ளோயரான இவர் சாட்ஜிபிடியில் இருந்த பிரச்சினையை எழுப்பினார். அதாவது உலகையே புரட்டிப் போட்ட சாட் ஜிபிடியினல் டேட்டா பாதுகாப்பு வைக்கப்படுவதில்லை என்ற பிரச்சினையை முதலில் எழுப்பியவர் இவர் தான். இந்தச் சூழலில் தான் கடந்த நவம்பர் 26ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் பாலாஜி இறந்து கிடந்தார். நல்ல நிலையில் இருந்த பாலாஜி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது பேசுபொருள் ஆனது. அதேநேரம் பாலாஜியின் சடலத்தை ஆய்வு செய்த சான்பிரான்சிஸ்கோ தலைமை மருத்துவர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தது. போலீசாரும் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது போலவே தெரிவதாகக் குறிப்பிட்டனர். "5000 பெண்கள்.." சாட் ஜிபிடி வந்ததும் மொத்தமாக மாறிய டேட்டிங் வாழ்க்கை.. கடைசியில் என்னாச்சு பாருங்க சந்தேகம் கிளப்பிய தாய்: இருப்பினும், பாலாஜியின் தாயார் தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதனால் எஃப்.பி.ஐ விசாரணை தேவை என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.. பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணை மூலம் வெளிவரும் ஆதாரங்கள் பாலாஜி தற்கொலையால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்பதையே காட்டுவதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பாலாஜியின் அபார்ட்மெண்ட் சூறையாடப்பட்டது.. பாத்ரூமில் சண்டை நடந்ததற்கான அறிகுறிகள் மற்றும் ரத்தம் இருக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் குளியலறையில் வைத்து அவரை யாரோ தாக்கியது போலத் தான் தெரிகிறது. இந்த படுகொலை சம்பவத்தை அதிகாரிகள் தற்கொலை எனச் சொல்லி மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் அது நீதி கிடைப்பதைத் தடுக்காது. எங்களுக்கு எஃப்.பி.ஐ விசாரணை தேவை" என்று அவர் பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க்: பூர்ணிமா ராவின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டானது. பலரது கவனத்தையும் அவரது ட்வீட் ஈர்ப்பதாக இருந்தது. இந்தச் சூழலில் தான் எலான் மஸ்கே இதற்குப் பதிலளித்துள்ளார் இது தற்கொலையைப் போலத் தெரியவில்லை என்று அவரும் ட்வீட் செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் பாலாஜியின் மரணம் தொடர்பாக எலான் மஸ்க் ட்வீட் செய்வது இது முதல்முறை இல்லை. பாலாஜியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்பது போல ஏற்கனவே எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. யார் இந்த பாலாஜி! பின்னணி: பாலாஜி சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா பகுதியில் வளர்ந்தார்.. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயின்ஸ் படித்தார். படிக்கும் போதே கடந்த 2018 கோடைக்கால இன்டர்ன்ஷிப்பிற்காக ஏஐ லேப்பில் வேலை செய்தார். படித்து முடித்துவிட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஓபன் ஏஐ நிறுவனத்திலேயே இணைந்தார். அவர் தனது முதல் பிராஜக்ட்டாக வேப்ஜிபிடியில் வேலை செய்தார். அதுவே பின்னாட்களில் சாட்ஜிபிடியாக மாறியது குறிப்பிடத்தக்கது. சாட்ஜிபிடி டேட்டாவில் பாதுகாப்பு இல்லை.. காப்பி ரைட் விதிமுறைகளை மீறுகிறது என்று பாலாஜி தான் முதலில் நியூயார்க் டைம்ஸ் இதழ் மூலம் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். கடந்த நவ. 18ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகி முக்கிய ஆவணங்களைத் தருவார் என்று வழக்கறிஞர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post