சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே 8 முறை சாட்டையால் நேற்றைய தினம் அடித்துக் கொண்டார்.. அண்ணாமலை மேற்கொண்டிருந்த இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மிகுந்த சலசலப்பை அரசியல் களத்தில் உண்டுபண்ணியிருக்கும் நிலையில், கூல் சுரேஷ் செய்துள்ள காரியம், பலரது கவனத்தையும் தற்போது பெற்று வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில், வில்லன், காமெடி ரோல்களில் நடித்து வருபவர் கூல் சுரேஷ்... பல வருடங்கள் சினிமாவில் இருந்தாலும், மிகப்பெரிய அளவுக்கு வளரமுடியவில்லை.. கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.. எனினும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
சிம்பு ரசிகர்: சினிமா ஸ்பாட்டுக்கே சென்று சினிமாக்களை விமர்சனம் செய்து அசத்துவார்... முதல் நாள், முதல் காட்சிக்கே சினிமா தியேட்டர் வாசலில் நின்று விமர்சனம் தந்து, பொதுமக்களின் கவனத்தை தன்மீது குவித்து விடுவார்.. சிம்புவின் தீவிர ரசிகரான இவர், சிம்புவை பற்றி பேசாமல் எந்த பேட்டியையும் முடித்தது கிடையாது.. வெந்து தணிந்தது காடு படத்துக்காக இவர் தந்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது..
கலகலப்பாகவும், ஆதங்கமாகவும் பேசக்கூடியவர் என்பதால், தன்மீதான விளம்பரத்தை தேடிக் கொள்ளவே பேசுகிறார் என்ற விமர்சனமும் இவர்மீது இருக்கிறது.. பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்து, பெரிய அளவில் பிரபலமானார்.
ஹெலிகாப்டர்: சமீபத்தில் GOAT படத்திற்கு ஆட்டுக்குட்டியை தூக்கி கொண்டு செல்வதும், ஹெலிகாப்டரில் வருகிறேன் என கூறி பொம்மை ஹெலிகாப்டருடன் தியேட்டருக்கு வருவதுமான இவரது புரமோஷன்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு திரு.மாணிக்கம் என்ற படத்திற்கு புரமோஷனை செய்துள்ளார்.. படத்தின் பெயர், தயாரிப்பாளர் லிங்குசாமி பெயர்களை சொல்லி கொண்டே, சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டார்..
தன்னுடைய நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்து கொண்டு, சட்டையை இடுப்பில் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக, கையில் சினிமா போட்டோ அட்டையை வைத்து கொண்டு, "திருமாணிக்கம்....... திருப்பதி பிரதர்ஸ்....... போஸ்......... டைரக்டர் லிங்குசாமி...... திருப்பதி பிரதர்ஸ்"..... என திரும்ப.... திரும்ப... கூவிக்கொண்டு தனக்கு தானே சரமாரியாக சாட்டையால் அடித்து கொண்டு போராட்டம் நடத்தினார் கூல் சுரேஷ்.
அண்ணாமலை: நேற்றுதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார்.. இந்த சம்பவத்தின் சலசலப்பும், பரபரப்பும் ஓயாத நிலையில், கூல் சுரேஷ் தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
கடந்த தேர்தலின்போது, தமிழக பாஜகவுக்காக பல்வேறு பிரமுகர்களும் பிரச்சாரத்தில் இறங்கியிருந்தனர்.. இதில், கூல் சுரேஷும் பாஜகவுக்காக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.. மற்றவர்களையும்விடவும், வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதில் ஆர்வமும், தீவிரமும் கொண்டிருந்தார் கூல் சுரேஷ். ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காகவே, காய்கறி மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் தினம் தினம் மெனக்கட்டிருந்தார்.
பாஜக பிரமுகர்: இப்போதும் பாஜக தலைவர் போல சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு பட பிரமோஷன் செய்துள்ளார் கூல் சுரேஷ்.. ஆனால், கிண்டலடித்து இவ்வாறு செய்தாரா? அல்லது பாஜக பிரமுகராகவே செயல்பட்டு இவ்வாறு சாட்டையால் அடித்து கொண்டாரா? என்பதுதான் தெரியவில்லை.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.