புத்தாண்டு ராசி பலன்: படாத பாடுபட்ட விருச்சிக ராசிக்காரர்களே.. 2025 இல் அதிர்ஷ்டம் கொட்டும்

post-img
புத்தாண்டு 2025: கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளையும், குடும்பத்தில் பிரிவுகளையும், உறவுகளுக்கிடையே பிரச்னைகளையும் சந்தித்து வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு என்ன மாற்றங்களைத் தரப் போகிறது. என்ன நற்பலன்களைப் பெறுவார்கள். எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for viruchigam) நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று யார் என்ன தவறு செய்தாலும் அது தவறுதான் என்று சுட்டிக் காட்டக்கூடியவர்கள். ஒரு மனிதனுக்கான தகுதி என்பது உண்மையாக இருக்க வேண்டும், உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வீர்கள். அதைக் கடைப்பிடிக்கவும் செய்வீர்கள். உட்கார்ந்து சாப்பிடுவது, அடுத்தவர்களை குறை கூறுவது உங்களுக்குப் பிடிக்காது. முன்கோபம் அதிகமாக இருக்கும். அதைத்தான் உங்களுடைய குறையாக எல்லோரும் சொல்வார்கள். இருப்பினும் அடுத்தவர்களை திருத்துவதற்காகத்தான் கோபப்படுவீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களுடன் பழகுபவர்களே உங்களை போகப்போகத்தான் புரிந்து கொள்வார்கள். 2025 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு அருமையான ஆண்டாக இருக்கும். ராசிக்கு இரண்டாம் இடத்தில் வருடம் பிறப்பதால், அழகு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஒருபக்கம் அதிகமாகிக் கொண்டே போகும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதங்கள் விலக ஆரம்பிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிக் கொண்டு வந்த நிலையில் இனி சேமிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். (Puthandu rasi palan for viruchigam) வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். பாதியில் நின்றிருந்த வீட்டை கட்டி முடிப்பது, அதிக வட்டிக்கு வாங்கிய கடனை குறைந்த வட்டிக்கு வாங்கி பிரச்னையை தீர்ப்பீர்கள். நான்காம் இடத்தில் சனி பகவான் உட்கார்ந்திருப்பதால் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏதாவதொரு பிரச்னை, ஒன்று போனால் ஒன்று என செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள். 2025 ஆம் புத்தாண்டுடன் அனைத்து பிரச்னைகளும் தீரும். மார்ச் 29 ஆம் தேதி முதல் ராசிக்கு நான்காம் இடத்தை விட்டு விலகி ஐந்தாம் இடத்தில் போய் சனி பகவான் உட்காரப் போகிறார். மார்ச் 29 முதல் தாய்க்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். தாயாருடன் இருந்த வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்கினால் கூட அதிலும் பிரச்னை வந்திருக்கும். வாகனப் பிரச்னை, வீடு புனரமைப்பு பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். (Viruchigam lucky zodiac sign) உத்தியோகத்தில் கடுமையாக வேலை செய்திருந்தால் கூட வேறு யாராவது நல்ல பெயர் வாங்கி கொண்டிருந்தீர்ப்பீர்கள். இனி உழைப்புக்கேற்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இரண்டு நாள் நல்ல வருமானமும், ஐந்து நாள் ஒன்றுமே இல்லாமல் இருந்திருக்கும். இனி வாரம் முழுவதுமே லாபத்தைக் காணும் யோகம் உள்ளது. வாடகைக் கடையில் இருந்து சொந்த கடைக்கு மாறும் வாய்ப்பு உண்டாகும். மே 14 முதல் எட்டாம் இடத்துக்கு குரு போவதால் பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். வெளிமாநிலம், வெளிநாடு போவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு வருவதால் மே 18 முதல் ராகு பகவான் 4 ஆம் வீட்டுக்கு வருவதால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது நல்லது. கேது 10வது வீட்டில் அமருவதால் உத்தியோகத்தில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றியைத் தரும் ஆண்டாக அமையும். அனைத்து நல்ல விஷயங்களும் நடக்க ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. உளுந்தம்பருப்பு தானம் வழங்கலாம். ஏழை மாணவர்களுக்கு உதவுவது நல்ல பலன்களைத் தரும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post